என்னோட ‘பிளேயர் ஆப் தி டோர்னமெண்ட்’ இவர்தான் – இந்திய வீரருக்கு வாக்களித்த பட்லர்!

0
1258

என்னுடைய தொடர் நாயகன் விருது இவருக்குத்தான் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.

நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலககோப்பை தொடரில் அரையிறுதி சுற்று முடிவடைந்து இறுதிச்சுற்று(நவம்பர் 13) நடக்கவுள்ளது. இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

இந்த உலககோப்பை தொடர் பல அணிகளுக்கு பின்னடைவையும், சில கற்றுக்குட்டி அணிகளுக்கு சிறப்பான அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. தகுதி சுற்றில் நமீபியா அணி இலங்கையை வீழ்த்தியதில் துவங்கி, சூப்பர் 12 சுற்றில் தென் ஆப்பிரிக்காவை நெதர்லாந்து அணி வீழ்த்தியது வரை சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லை.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை தொடரில் வெறுமனே பேட்ஸ்மேன்கள் அல்லது பௌலர்கள் என ஒரு சார்பு வீரர்களுக்கு சாதகமாக அமையாமல் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என அனைத்துவித வீரர்களுக்கும் சாதகமாக அமைந்தது.

தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் தங்களது அணிக்காக போராடிய சிறந்த 9 வீரர்களை பட்டியலிட்டுள்ளது ஐசிசி. இந்த ஒன்பது வீரர்களிலிருந்து ஒருவர் டி20 உலக கோப்பை தொடரின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்படவுள்ளார்.

- Advertisement -

இந்தியாவில் இருந்து இரண்டு பேரும், பாகிஸ்தான் அணியில் இருந்து இருவரும், இங்கிலாந்து அணியில் இருந்து மூன்று பேரும், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணியிலிருந்து தலா ஒருவரும் இந்த ஒன்பது பேர் பட்டியலில் இருக்கின்றனர்.

இந்திய அணியில் இருந்து சந்தேகமின்றி விராட் கோலி மற்றும் சூர்யாகுமார் யாதவ் இருவரும் தான் இடம்பெற்று இருக்கின்றனர்.

இந்த 9 வீரர்களில் எனது ஓட்டு சூரியகுமார் யாதவிற்கு என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஜோஸ் பட்லர்.

“சூரியகுமார் யாதவ் முற்றிலும் வேறுபட்ட வீரர். அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம். அவரே சில தவறுகள் செய்து ஆட்டம் இழந்தால் மட்டுமே விக்கெட் எடுக்க முடியும். மைதானத்தின் அனைத்து பகுதிகளும் அடிக்கும் அளவிற்கு ஷாட்கள் வைத்திருக்கிறார். நிச்சயம் இந்த தொடரில் அவருக்கு தான் சிறந்த வீரர் விருது கொடுக்கப்பட வேண்டும்.

இந்திய அணிக்காக தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் மிக முக்கிய கட்டத்தில் சிறப்பாக விளையாடினார். ரன் குவிக்கும் வேகம் மற்றும் போட்டியின் திருப்புனையாக இருந்திருக்கிறார். இதனால் எனது ஓட்டு அவருக்கே.” என்று கூறினார்

உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 வீரர்கள் பட்டியல்: