டி காக்கின் திடீர் ஓய்வைக் குறித்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கூறியது

0
1378
Quinton de Kock and Jos Butler

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டிற்குச் சென்றது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டை வென்று முன்னிலை வகிக்கிறது. முதல் முறையாக இதன் மூலம் இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்தவர் குயின்டன் டி காக். அதிரடி ஆட்டக்காரரான இவர் கடைசி இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தில் மாற்ற பார்த்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவுட்டாகி வெளியேற இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது.

தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் மூன்றாவது மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் முதல் போட்டி முடிந்ததுமே தான் மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரம் சேவை அளிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளதாக தன்னுடைய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ளதாகவும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இவரது ஓய்வு குறித்து தற்போது பேசியுள்ள இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர், நான் டீகாகின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். மேலும் டீகாக்கை இந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டிக் செய்வதைத்தான் எப்போதும் பார்க்க விரும்புவதாகவும் நிச்சயம் ரசிகர்கள் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை பார்க்க விரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் இவரைத் தான் மிஸ் செய்வதாக கூறியுள்ளார் பட்லர்.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி டீகாக் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வலுவிழந்துள்ளது. இதனை நன்கு பயன்படுத்தி இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தென்னாப்பிரிக்க நாட்டில் தன்னுடைய முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்