“நாயகன் மீண்டும் வரான்” மும்பை அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர்!

0
7480

2023 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் ஜோப்ரா ஆர்சர் நிச்சயம் விளையாடுவார் என்று மும்பை தரப்பிலிருந்து தகவல்கள் வந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டிகளுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னர் 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் நிபந்தனை விதித்திருந்தது. அதற்கேற்றால் போல அனைத்து அணிகளும் அந்த பட்டியலை வெளியிட்டுவிட்டன.

மும்பை அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் இம்முறை அணியிலிருந்து வெளியேற்றப்படுவதாக இருந்தார். ஆனால் வேறு அணிகளுக்கு விளையாட விருப்பமில்லை என்பதால் ஓய்வு முடிவை அறிவித்தார். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக மும்பை அணி நிர்வாகம் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை அவரிடம் கொடுத்திருக்கிறது.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தெரிந்த போதும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பேச்சாளர் ஜோப்ரா ஆர்சரை மும்பை அணி வம்படியாக எடுத்து வைத்தது. எதிர்காலத்திற்கு அவர் உதவுவார் என்ற நம்பிக்கையில் இந்த முடிவினை எடுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பி இருக்கிறார். நிச்சயம் வருகிற ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்ற தகவல்கள் வந்திருக்கிறது.

அதேபோல் உலகக்கோப்பைக்கு முன்பு காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய பும்ரா மீண்டும் குணமடைந்து வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற தகவலும் வந்திருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு நட்சத்திர வீரர்கள் விளையாடுவார்கள் என்ற தகவலால் மும்பை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.