அதற்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார் – இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டைப் பற்றி தாழ்வாகப் பேசிய பிரண்டன் மெக்கல்லம்

0
134
Joe Root and Brendon McCullum

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது அப்போது மிகவும் விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சில் கேப்டன் ரூட் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அது அணியின் வெற்றிக்கு உதவாததால் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மிகவும் விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும் கேப்டன் ரூட் முதல் போட்டியில் தோற்றதற்கான அனைத்து பழிகளையும் தன்மீது ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து பேசி உள்ள முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கலம், ரூட் மிகச்சிறந்த வீரர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் ஆனால் ஒரு தலைவனாக அவர் சரியாக செயல்படுவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் மெக்கலம் பேசுகையில் முக்கியமான நேரங்களில் ஆட்டத்தை தனது அணியின் பக்கம் இழுக்க தெரியாமல் எதிரணியின் பக்கம் ஆட்டத்தை விட்டு விடுகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மெக்கல்லம் கூறியது போலவே முதல் ஆஷஸ் போட்டியில் ஒருகட்டத்தில் 306 – 7 என்று இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியில் 425 ரன்கள் அடிக்க விட்டது இங்கிலாந்து. அதேபோல பேட்டிங்கிலும் 234 – 4 என்று இருந்தாலும் அதன்பின்பு 297 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட் ஆனது. இப்படி முக்கியமான நேரங்களில் மாற்றத்தை எதிர் அணிக்கு இங்கிலாந்து இழந்து விடுவதைத்தான் மெக்கலம் விமர்சித்துள்ளார்.

வரும் 17ம் தேதி இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த வருடம் ஒரு பேட்டிங் வீரராக தனது திறமையை ஏற்கனவே நிரூபித்து விட்ட ரூட் இந்த முறை கேப்டனாக தன்னுடைய திறமையை நிரூபித்து ஆஷஸ் கோப்பையை வெல்வாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்