ஆஷஸ் டெஸ்ட் தொடரில் டான் பிராட்மேனின் மோசமான சாதனையை சமன் செய்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்

0
720
Don Bradman and Jeo Root

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் குவித்து டிக்ளேர் அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 137 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்களில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் இங்கிலாந்து அணி களமிறங்கி அதனுடைய முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 113 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் மத்தியில் ஸ்காட் போலந்த் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி அதனுடைய 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 101 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் மத்தியில் இரண்டாவது இன்னிங்சில் ஜாக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி அதனுடைய 2வது இன்னிங்சில் தற்பொழுது விளையாடி வருகிறது. 4-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி இன்று 11 ஓவரில் 30 ரன்கள் குவித்து எந்த விக்கெட்டையும் இழக்காமல் விளையாடி வருகிறது. கடைசி நாளான நாளை அந்த அணி இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து வெற்றி பெறுமா அல்லது இறுதிவரை போராடி நின்று போட்டியை சமன் செய்யுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஏனெனில் இதற்கு நடந்த முந்தைய 3 போட்டிகளில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் சமன் செய்த சாதனை

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் லெஜன்ட் கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 5 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் டக் அவுட்டாகி, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஒரு கேப்டனாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவரும் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஒரு கேப்டனாக டான் பிராட்மேன் ஐந்து முறை டக் அவுட் ஆனது போலவே, தற்பொழுது கேப்டன் ஜோ ரூட்டும் ஐந்து முறை டக் அவுட்டாகி அவரது சாதனையை சமன் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி இங்கிலாந்து அணியில் விளையாடிய கேப்டன்கள் மத்தியில் மைக்கேல் ஏதர்டன் அதிகபட்சமாக 8 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தற்போது ஜோ ரூட் 7 முறை டவுட் ஆகி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஜோ ரூட் இன்னும் ஒரு முறை டக் அவுட் ஆனால், இங்கிலாந்து அணி கேப்டன்கள் மத்தியில் 8 முறை டக் அவுட் ஆகி மைக்கேல் ஏதர்டன் செய்த சாதனையை சமன் செய்வார். அதேசமயம் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு முறை அவர் டக் அவுட் ஆனால், டான் பிராட்மேனை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.