விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்.. இங்கிலாந்து அபாரம்

0
1310

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி நகரில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 506 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 18 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இதன் பின்னர் வில் ஜாக் 30 ரன்களும் , ராபின்சன் 37 ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி 657 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர்கள் அப்துல்லா 89 ரன்களும் இமாம் உல் ஹக் 90 ரன்களும் எடுக்க இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவில் பாகிஸ்தான அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில் ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதில் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் 23 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஐந்து அணிகள் அல்லது அதற்கு மேல் பங்கேற்கும் அணிகள் அடங்கிய தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜோரூட் படைத்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ,டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலகக்கோப்பை ,ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிக்கான சூப்பர் லீக் என அனைத்து தொடர்களையும் சேர்த்து விராட் கோலி 114 போட்டிகள் விளையாடி 5017 ரன்களை சேர்த்து முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

இதில் ஆறு சதங்களும் 40 அரை சதங்களும் அடங்கும். தற்போது இந்த சாதனையை ஜோ ரூட்  78 போட்டிகளில் முறியடித்து இருக்கிறார். அவர் 5121 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 15 சதங்களும், 22 அரை சதங்களும் அடங்கும். தற்போது இந்த சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் நான்காம் தேதி தொடங்கும் நிலையில் கோலி மீண்டும் ஜோ ரூட்டை முந்தலாம்.