முதல் டி20 போட்டியில் ட்விஸ்ட்; ஹர்திக் பாண்டியாவின் போட்டிருக்கும் பிளான்!

0
269

முதல் டி20ல் நியூசிலாந்து அணியை வீழ்த்த ஹர்திக் பாண்டியா புதிய திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருநாள் தொடர் முடிவற்றவுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. முதல் டி20 போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்குள் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து இடம் பிடித்துள்ள பிரித்திவி ஷா மிகச் சிறந்த பார்மில் இருக்கிறார். அவரை ஹர்திக் பாண்டியா எப்படி பயன்படுத்துவார்? துவக்க வீரராக களம் இறக்கினால், யாரை வெளியில் அமர்த்துவார்? என்கிற பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தது.

ராஞ்சி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய அணியை மாலை நேரம் மகேந்திர சிங் தோனி சந்தித்தார். சில வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தோனியை சந்தித்த பிறகு நேரடியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ஹார்திக் பாண்டியா, பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலும் கொடுத்தார் அப்போது அவர் பேசியதாவது:

- Advertisement -

” நியூசிலாந்து அணி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பலம் மிக்க அணி. அவர்களை வீழ்த்த வேண்டும் என்றால், அந்த அணியை விட அதிகமாக திட்டம் மற்றும் உழைப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் மூன்று ஆல் ரவுண்டர்கள் உடன் களமிறங்குவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” என கூறினார்.

“சுப்மன் கில் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். நிச்சயம் அவரை வெளியில் அமர்த்தி வீணடிக்க மாட்டேன். அவரது பார்மை பயன்படுத்திக் கொள்வேன். கில் துவக்க வீரராக களம் இறங்குவார்.” எனவும் தெளிவுபடுத்தினார்.

இதை வைத்து பார்க்கையில் பிரித்திவி ஷா இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதே நேரம் ஜித்தேஷ் ஷர்மா பற்றியும் ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்தார்.

“உள்ளூர் போட்டிகளில் நன்றாக செயல்பட்டதற்கு பரிசாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.” என்றார். இதை வைத்து பார்க்கையில் ஜிதேஷ் பிளேயிங் லெவனில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.