8 விக்கெட் அள்ளிய உனட்கட்; 5 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தபின் போராடி 133 ரன்களை எட்டிய டெல்லி!

0
856

ஜெயதேவ் உனட்கட் 8 விக்கெட் வீழ்த்தி அசத்தல், டெல்லி அணி 133க்கு ஆல் அவுட் ஆனது.

நடைபெற்று வரும் 2022/23 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள சௌராஷ்ட்ரா மற்றும் டெல்லி இரு அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார் டெல்லி அணியின் இளம் கேப்டன் யஸ் துல்.

தைரியமாக எடுக்கப்பட்ட இந்த முடிவு டெல்லி அணிக்கு சாதகமாக அமையவில்லை. முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய வரலாறு படைத்தார் சௌராஷ்ட்ரா அணியின் கேப்டன் உனட்கட். அடுத்த ஓவரில் இரண்டு விக்கெட் கைப்பற்றி இரண்டு ஓவர்களில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜெயதேவ் உனட்கட்.

5 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து பரிதாபமான நிலையில் இருந்தபோது, பிரான்சு விஜய்ரன் மற்றும் ஹிருத்திக் சோகின் இருவரும் சிறிது நேரம் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தது.

15 ரன்களுக்கு பிரான்சு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவாங்க் வசிஸ்து, ஹிருத்திக் உடன் ஜோடி சேர்வது நல்ல பார்ட்னர் அமைக்க அணியின் ஸ்கொர் 100ஐ கடந்தது. இந்த ஜோடி ஒன்பதாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. வசிஸ்து துரதிஷ்டவசமாக 38 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

10 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த பிறகு அடுத்து வந்து இரண்டு வீரர்களும் அணியை சரிவிலிருந்து மீட்டு அவமானமான ஸ்கோரில் இருந்து நல்லபடியான ஸ்கொருக்கு எடுத்துச் சென்றனர். இறுதியில் 133 ரன்களுக்கு டெல்லி அணி ஆல் அவுட் ஆனது.

12 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 39 ரன்கள் விட்டுக் கொடுத்த கேப்டன் ஜெயதேவ் உனட்கட் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஞ்சிக்கோப்பையில் அவரது சிறப்பான பந்துவீச்சு இதுவே ஆகும். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹிருத்திக் ஷோகின் 68 ரன்கள் அடித்திருந்தார்.

சௌராஷ்ட்ரா அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. உணவு இடை வேலைக்குப் பின்பு 12 ஓவர்கள் பிடித்திருந்த சௌராஷ்ட்ரா அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருக்கிறது. துவக்க வீரர்களாக ஹார்விக் தேசாய் மற்றும் ஜே கோஹில் இருவரும் விளையாடுகின்றனர்.