பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் உள்ளே வருகிறார் இடது கை வேகப்பந்து வீச்சாளர்; முகமது சமிக்கு மாற்று வீரராக அறிவிப்பு!

0
3699

வங்கதேசத்தில் நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் அழைக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் சௌராஷ்டிரா அணிக்கு ஜெயதேவ் உனட்கட் கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் பந்துவீச்சில் அசத்தி கோப்பையை பெற்றுதந்தார். கையில் ஏற்பட்ட காயத்தினால் சமி, வங்கதேசம் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது முகமது ஷமிக்கு பதிலாக உனட்கட் டெஸ்ட் போட்டிகளுக்குதேர்வு செய்யப்பட்டுள்ளார்..

- Advertisement -

31 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனட்கட், கடைசியாக 2010ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் தனது ஒரே டெஸ்டில் விளையாடினார். அதன்பிறகு, அவர் ஏழு ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி, வேகப்பந்து வீச்சாளர் உனட்கட் தேர்வு செய்யப்பட காரணம், அவரது தற்போதைய ஃபார்ம் என தெரியவந்துபள்ளது. சமீபத்தில் முடிவடைந்த விஜய் ஹசாரே டிராபியில் 10 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்தவராக இருந்தார்.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான உனட்கட், தனது 96-போட்டிகளில் 353 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் ரஞ்சி டிராபியின் 2019-20 சீசனில் சாதனை முறியடிப்பும் அடங்கும். அதில் அவர் 67 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக அந்த ஆண்டு சவுராஷ்டிரா தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -