12 வருடத்திற்குபின், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து புதிய உலகசாதனை; தினேஷ் கார்த்திக் சாதனை முறியடிப்பு!

0
1777

12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் ஜெயதேவ் உனட்கட்.

வங்கதேச அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய முகமது சமிக்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட் எடுக்கப்பட்டார். 2வது டெஸ்டில் பிளேயிங் லெவனில் இருக்கிறார்.

- Advertisement -

இவர் கடந்த 2010ல் தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் செஞ்சூரியன் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்குபின் டெஸ்ட் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

கடந்த 2019-20 ரஞ்சிக்கோப்பை சீசனில் சௌராஷ்டிரா அணிக்காக அபாரமாக விளையாடிய இவர், 16 இன்னிங்ஸ்களில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனால் இவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

2010ம் ஆண்டிற்கு பிறகு 22, டிசம்பர் 2022ல் வங்கதேசம் அணியுடன் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்கிறார். சுமார் 12 வருடங்கள் கழித்து மீண்டும் அணையில் விளையாடுவதால் புதிய சாதனையை படைத்திருக்கிறார் உனட்கட்.

- Advertisement -

இந்த 12 ஆண்டுகளில் இந்திய அணி 118 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளது. அதிக டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன் தினேஷ் கார்த்திக் 87 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டது சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை உனட்கட் முறியடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக, இங்கிலாந்து வீரர் கேரத் பேட்டி என்பவர் சுமார் 142 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்து விளையாடியது முதலாவதாக இருக்கிறது. 118 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட ஜெயதேவ் உனட்கட் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.