கேப்டனாக பும்ரா செய்த சாதனை.. இது வேற லெவல் ஆச்சே.. பந்தயத்தில் ஹர்திக்கை முந்தினாரா?

0
1409

ஒரு அணியின் கேப்டன் என்பவன் பொறுப்புகளை சுமந்து கொண்டு தன்னுடைய ஆட்டத்தின் மூலம் மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகவும் ஊக்கத்தைக் கொடுக்கும் வகையிலும் துருவ நட்சத்திரமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் கேப்டனாக பும்ரா பாஸ் மார்க்கை பெற்றுவிட்டார் என்று தான் தோன்றுகிறது .வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி வீரர்கள் செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுத்தது போல் செயல்பட்டனர்.

- Advertisement -

திலக் வர்மா போன்ற சில வீரர்களைத் தவிர மற்றவர்கள் பல பில்டிங் மிஸ் செய்தனர். எதற்கு இந்த தொடரில் நம்மை விளையாட வைக்கிறார்கள் என்ற பாணி தான் ஒவ்வொரு வீரரிடமும் இருந்தது. ஆனால் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கில்லி போல் பில்டிங்கில் செயல்பட்டனர். ஒரு அணி கூட விடக்கூடாது என்ற வெறி இந்திய அணி வீரர்களிடம் தென்பட்டது.

இதற்கு பும்ராவும் அணி நிர்வாகமும் கூட காரணமாக இருக்கலாம். மேலும் பும்ரா தனது முதல் ஓவர்களில் இரண்டு விக்கெட் வீழ்த்தி தன்னுடைய வருகையை சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார். 11 மாதத்திற்கு பிறகு திரும்பியும் முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றார்.

பும்ரா கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு தரவு வெளிவந்துள்ளது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட போது ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி பேட்டிங்களும் ஒரே ஓவரில் 35 ரன்கள் எடுத்து மற்ற வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்.

- Advertisement -

தற்போது டி20 கிரிக்கெட் கேப்டனாக அறிமுகமாகி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றி இருக்கிறார். இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய பும்ரா தாம் காயத்தில் இருந்தபோது எடுத்த கடின முயற்சிக்கு பலனாக இதனை கருதுவதாக கூறினார்.

  கேப்டனாக இருக்கும்போது அணியைப் பற்றி யோசிக்கவே நேரம் இருக்கும் என்றும் தமது செயல்பாடு குறித்து நினைக்கவே நேரம் இருக்காது என்றும் பும்ரா கூறினார். ஆட்டத்தில் வெற்றியை பெற்றாலும் அடுத்தது என்ன செய்ய வேண்டும். எதில் முன்னேற்றம் காண வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பும்ரா இளம் வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடுவது அணிக்கு நல்ல விஷயம் என்று பாராட்டினார்.