டெஸ்ட் கேப்டன் பதவி எ‍னக்குக் கிடைத்தால் பெருமையாக இருக்கும் – ஜஸ்பிரித் பும்ரா ; விராட் கோஹ்லி குறித்து புகழாரம்

0
843
Jasprit Bumrah about Virat Kohli and Test Captaincy

கடந்த ஜனவரி 15-ம் தேதி விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இனி கேப்டனாக தான் நீடிக்கப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிவித்தார். கடந்த ஏழு ஆண்டுகளில் அவரது தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 1-2 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து ஏமாற்றத்தை அளித்தது. இந்த தோல்வியை தொடர்ந்து விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியது, அவரது ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றத்தையே அளித்தது.

- Advertisement -

தற்பொழுது அனைத்து இந்திய ரசிகர்களின் ஒரே கேள்வி, ” இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பதே”. பல்வேறு வீரர்கள் மற்றும் பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்க, மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. கேப்டன் பதவி குறித்து ஜஸ்பிரித் பும்ராவிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டன அதற்கு அவரும் தற்போது பதில் அளித்துள்ளார்.

கேப்டன் பதவியை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்

ஒரு அணியை தலைமை தாங்கும் கேப்டன் பதவி நம்மைத் தேடி வந்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்ல போகிறார்கள். எனக்கும் அப்படிதான், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி எனக்கு கிடைக்கப் பெற்றால் நான் வேண்டாம் என்று சொல்ல போவதில்லை. கேப்டன் பதவி எனக்கு கிடைத்தால் மிகப் பெருமையாக அதை எடுத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

விராட் கோலி தலைமையில் விளையாடிய தருணங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரது தலைமையில் விளையாடிய தருணங்களில் அளவில்லா மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன். எங்களது அணியில் எப்பொழுதும் ஒரு தலைவராக அவர் எங்களை வழிநடத்தி கொண்டேதான் இருப்பார்.

- Advertisement -

அணியில் ஒரு வீரராக இனி விராட் கோலி இருந்தாலும், அணி சம்பந்தமான யோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை அவர் கூறிக் கொண்டே தான் இருக்கப் போகிறார் என்றும் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.

எங்களது அணியில் அனைத்து வீரர்களுக்கும் சரியான வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் குறித்து தற்பொழுதே யோசிக்கத் தொடங்கி விட்டோம். அந்த தொடருக்கு ஏற்றவாறு சிறந்த வீரர்களை கொண்ட அணியை நாங்கள் தயார் படுத்த தொடங்கி விட்டோம் என்று நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளுடன் ஜஸ்பிரித் பும்ரா விடைபெற்றார்.