கபில் தேவின் 41 ஆண்டுகால வரலாற்று சாதனை – மூன்றாவது டெஸ்ட்டில் முறியடிக்க காத்திருக்கும் பும்ரா

0
548
Kapil Dev and Jasprit Bumrah

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் டிராவில் முடிந்தது. இரண்டாம் ஆட்டத்தில் எப்படியாவது டிரா செய்தால் போதும் என்று பல இந்தி ரசிகர்கள் வேண்டிக் கொண்டு இருக்கும் பொழுது யாரும் எதிர்பாராத விதமாக இந்திய பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கிலும் பௌலிங் மிரட்டி வெற்றியை இந்திய அணிக்கு பெற்று தந்தனர். தற்போது இரண்டு அணி வீரர்களும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட தொடரை வென்று விட்ட மாதிரி என்ற நிலையில் இந்திய அணி களம் காண்கிறது.

குறிப்பாக இந்த தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சு பலரும் பாராட்டும் படியாக அமைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பலரின் விமர்சனத்திற்கு உள்ளான பும்ரா இந்த முறை எழுச்சி பெற்று இங்கிலாந்து அணியை சாய்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் இரண்டாவது இன்னிங்சில் 34 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் பும்ரா.

Jasprit Bumrah in Test

இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலமாக இந்திய வேகப்பந்துவீச்சு ஜாம்பவானான கபில் தேவின் சாதனையை முறியடிக்கக் நல்ல வாய்ப்பு பும்ராவிற்கு அமைந்துள்ளது. இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தொண்ணூற்று ஐந்து விக்கெட்டுகளை குவித்துள்ளார் பும்ரா. மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்னும் சாதனை தற்போது கபில் தேவ் கைவசம் உள்ளது. 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்த கபில்தேவ் எடுத்துக்கொண்ட போட்டிகளின் எண்ணிக்கை 25.

இந்த சாதனையை முறியடிக்க தற்போது உம்ராவிற்கு இரண்டு டெஸ்டுகள் உள்ளன. இன்னமும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கபில் தேவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை பும்ரா படைக்கலாம். சுமார் 41 ஆண்டு காலமாக முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கும் இதை தற்போது முறியடிக்க பும்ராவுக்கு நல்ல வாய்ப்பு கிடைந்துள்ளது.

தஸ்லிம் அரிஃப் என்னும் வீரர் கபில் தேவின் பந்து வீச்சில் சேட்டன் சவுகன் என்னும் வீரரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது தான் கபில் தேவின் நூறாவது விக்கெட். இது போல பும்ராவின் நூறாவது விக்கெட் எப்படி அமையும் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்ப்பின் உச்சிக்கு சென்று இருக்கிறார்கள்.