தென்னாபிரிக்க மண்ணில் கபில் தேவ்வின் சாதனையை சமன் செய்துள்ள பும்ரா

0
101
Jasprit Bumrah and Kapil Dev

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தொடர் சமநிலையில் உள்ளது. தற்போது 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும். இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கோலி மற்றும் புஜாரா தவிர வேறு எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாட வில்லை. கேப்டன் கோலி பொறுமையாக விளையாடி 79 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் அவருக்கு துணை நின்று விளையாடாத காரணத்தினால் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் கீகன் பீட்டர்சன் மட்டும் அரைசதம் கடந்தார். பும்ரா சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் வீழ்த்தப்பட்ட ஏழாவது 5 விக்கெட் இதுவாகும். இந்த சாதனையை தன்னுடைய இருபத்தி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்களான கபில் தேவ் மற்றும் இர்பான் பதான் இருவரும் இதேபோல இருபத்தி ஏழு போட்டிகளில் ஏழு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

மேலும் கேப் டவுன் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் பும்ரா. இதற்கு முன்பு ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் 5 விக்கெட்டுகளை பெற்றிருந்தனர். இந்திய அணி தற்போது 70 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. இன்று இன்னமும் 200 ரன்கள் சேர்த்து வலுவான ஒரு இலக்கை தென்ஆப்பிரிக்க அணிக்கு கொடுக்கும் பட்சத்தில், முதல் முறையாக இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம்.