“158-6.. தம்பி உன் வயசுக்கு மீறின பேட்டிங் பண்ணிட்ட” – குக் ஜெயஸ்வாலுக்கு பாராட்டு

0
1457
Cook

இந்திய அணியின் எதிர்கால வீரர் என்று சில காலமாக இளம் வீரர் சுப்மன் கில் பார்க்கப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது.

கடந்த வருடத்தில் இந்திய மண்ணில் டெஸ்ட் சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் சதம், மேலும் ஐபிஎல் தொடரில் மூன்று சதங்கள் என, பலரும் வீரருக்கு தேவையான அத்தனையையும் அவர் பெற்றார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், அதற்குப் பிறகு பேட்டிங்கில் பெரிய அளவில் இதுவரை ஜொலிக்கவில்லை.

இந்த நிலையில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 171 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்திய ஜெய்ஸ்வால், அதற்கு நேர் எதிரான டி20 வடிவத்திலும் பிரமாதப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருக்க, அதில் ஜெய்ஸ்வால் மட்டுமே ஆட்டமிழக்காமல் 179 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இழந்த ஆறு விக்கெட்டுகளும் சேர்த்து எடுத்த ரன்கள் வெறும் 158 மட்டுமே. விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டே இருந்தாலும், புத்திசாலித்தனத்துடன் கூடிய அதிரடியில் ஜெய்ஸ்வால் ரன்களை குவித்து கொண்டே இருந்தார். அவருடைய ஆட்டம் மிகவும் அனுபவப்பட்ட பேட்ஸ்மேன்களின் ஆட்டம் போல் இருந்தது.

இதுகுறித்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் கூறும் பொழுது “அவர் தன்னுடைய அணிக்கு தேவைப்படும் நேரத்தில் மிகச் சிறப்பான ரன்களை கொடுத்திருக்கிறார். இது அவரது 22 வயதுக்கு மேலான முதிர்ச்சியான மற்றும் திறமையான இன்னிங்ஸ்.

ஜெய்ஸ்வால் மிகவும் சிறப்பாக இருந்தார். அவரைத் தவிர இந்தியா இழந்த ஆறு பேட்ஸ்மேன்களும் எடுத்த ரன்கள் 158 மட்டுமே. ஜெய்ஸ்வாலை கழித்துவிட்டு பார்த்தால் இந்திய பேட்டிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

இதையும் படிங்க : U19 உலககோப்பை.. 2 சதங்கள்.. புது வரலாறு படைத்த இந்திய அணி.. அரை இறுதிக்கு தகுதி

இங்கிலாந்து அவருக்கு பந்தை வைடாக வீச முடியுமா என்று தெரியவில்லை. அது நிறைய ரன்களை கசிய விட்டு விடும். இங்கிலாந்துக்கு ஆபத்தாக முடியும்” என்று கூறியிருக்கிறார்.