ஜெய்ஸ்வாலுக்கு பயமே கிடையாது.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்தது அன்னைக்கு இதுதான் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

0
84
Starc

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால் தற்போது உலகில் அச்சமற்ற பேட்ஸ்மேனாக இருப்பதாக ஆஸ்திரேலியா நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி என்பது ஸ்டார் வீசிய பந்து தன்னிடம் மெதுவாக வருகிறது என அவரிடம் ஜெய்ஸ்வால் தைரியமாக கூறினார். இதைக் கேட்ட ஸ்டார்க் சிரித்தபடி சென்று விட்டார். ஆனால் அப்பொழுது உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி தற்பொழுது பேசியிருக்கிறார்.

- Advertisement -

எதிர்பார்ப்புக்கு மேல் சென்ற ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக விளையாடும் ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுவார்? என்பது குறித்து பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் அவர் ஜொலிக்கவில்லை என்பதால், வெளி மண்ணில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவர் சிறந்த வீரராக பார்க்கப்படுவார் என்ற நிலை இருந்தது.

இப்படியான நிலையில் முதல் இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டம் இழந்தார். ஆனால் அடுத்த இன்னிங்ஸ் திரும்பி வந்து161 ரன்கள் எடுத்தார்.அவர் தன்னை நிரூபித்தது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களிடம் தைரியமாக களத்தில் மோதினார். அவரிடம் எதிர்பார்த்ததற்கு மேல் பேட்டிங்கிலும் மன தைரியத்திலும் செயல்பட்டு காட்டினார். தற்போது அவர் மீதான எதிர்பார்ப்பு இந்த தொடரில் கூடுதலாக இருக்கிறது.

- Advertisement -

யார் பேசுவதையும் கேட்பதில்லை

ஜெய்ஸ்வால் பற்றி மிட்சல் ஸ்டார்க் கூறும் பொழுது “நான் மெதுவாக பந்து வீசுகிறேன் என ஜெய்ஸ்வால் கூறியது உண்மையில் எனக்கு கேட்கவில்லை. இப்போதெல்லாம் நான் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் பேசுவதில்லை. நான் முன்பு போல இந்த விஷயத்தில் நடந்து கொள்வதில்லை. நான் வீசிய ஒரு பந்தில் அவர் ப்ளிக் ஷாட் விளையாடினார். மீண்டும் அதே மாதிரி ஒரு பந்தை வீசி ஏன் அந்த ஷாட்டை விளையாடவில்லை என்று கேட்டேன். அவர் அந்த பந்தை தடுத்து விளையாடினார். அப்போது அவர் என்னை பார்த்து சிரித்தார். நாங்கள் அதோடு அதை விட்டு விட்டோம்”

இதையும் படிங்க : ஆஸிக்கு புடிக்காத இந்த விஷயத்தை ரோஹித் செய்யணும்.. அடுத்த போட்டிக்கு திட்டம் இதுதான் – ரவி சாஸ்திரி கருத்து

“ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக நிறைய கிரிக்கெட் விளையாடுவார். மேலும் வெற்றியும் பெறுவார். முதல் டெஸ்டில் சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடினார். முதல் இன்னிங்ஸில் நாங்கள் அவரை மலிவாக வீழ்த்தி விட்டோம். அதை அவர் ஏற்றுக் கொண்டார். அடுத்து அவர் சிறப்பாக விளையாடினார். அவர் தற்போது அச்சமற்ற இளம் வீரராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -