சிஎஸ்கே கேப்டன்சியை மறுபடியும் தல தோனி இடம் ஒப்படைத்த ஜடேஜா – காரணம் இது தான்

0
631
Jadeja and Dhoni captaincy

கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக சென்னை அணியை வழிநடத்துவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்னர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சுமாராகவே விளையாடி வருகிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 75.67 மற்றும் ஸ்ட்ரைக் 145.51ஆக இருந்தது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 22.40 மற்றும் ஸ்ட்ரைக் 121.74 ஆக மட்டுமே உள்ளது. அதேசமயம் பந்துவீச்சில் கடந்த ஆண்டு 13 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

மீண்டும் கேப்டனாக களமிறங்கும் மகேந்திர சிங் தோனி

கேப்டன்ஷிப் பொறுப்பில் தன்னால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே மீண்டும் சென்னையில் ஒரு வீரராக விளையாட விரும்புகிறேன் என்று ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ரவீந்திர ஜடேஜா தன்னுடைய கேப்டன் பொறுப்பை மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம் கொடுத்திருக்கிறார். சென்னை அணி நிர்வாகம் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை தற்பொழுது திரும்பப் பெற்றுருக்கிறார்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு, இந்த முடிவுக்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. மகேந்திர சிங் தோனி கேப்டனாக களமிறங்க உள்ளதால் சென்னை ரசிகர்கள் அனைவரும் சந்தோசமாக உள்ளனர்.