ஜடேஜாவின் இடத்திற்கு தமிழக வீரரால் ஆபத்து.. பட்டையை கிளப்பினார்

0
1333

நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கியதால் ஜடேஜாவின் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முதன்மை ஆல் ரவுண்டரான ஜடேஜா, கடந்த ஒரு ஆண்டில் மூன்று முறை காயம் அடைந்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டதால், ஓய்வில் இருந்த ஜடேஜா, டி20 உலககோப்பையில் விளையாடாத நிலை ஏற்பட்டது. இது இந்தியாவுக்கு பெறும் பின்னடைவை கொடுத்தது.

- Advertisement -

வங்கதேச தொடரில் ஜடேஜா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது மனைவியின் தேர்தல் பிரச்சாரத்தில் படும் பிஸியாக இருக்கிறார் இதனால் தமக்கு காயம் இன்னும் குணமாகவில்லை என்று கூறி ஜடேஜா கம்பி நீட்டி விட்டார்

ஜடேஜாவுக்கு பதில் களமிறங்கிய அக்சர் பட்டேலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ஜடேஜா இடத்திற்கு புதிய வீரரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ இறங்கியது. இதனால் நியூசிலாந்து தொடரில் தீபக் கூட மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 45 புள்ளி 4வது ஓவரின் 254 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த போது களத்திற்கு வந்தார். அப்போது நியூசிலாந்து பந்துவீச்சை அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்களை விளாசினார்.இதில் மூன்று பவுண்டரிகளும் மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 306 ரன்கள் என்ற இழக்கை எட்டியது. இதனைத் தொடர்ந்து பந்து வீச்சிலும் வாஷிங்டன் சுந்தர் அசத்தினார். கட்டுக்கோப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 10 ஓவரில் 42 ரன்களை விட்டுக் கொடுத்தார். எனினும் விக்கெட் ஏதும் விழித்த வில்லை. இருப்பினும் சிறிய மைதானத்தில் 55 மீட்டர் தான் பவுண்டரி அளவு இருந்தது.இந்த போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் 60 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்க வாஷிங்டன் சுந்தர் மட்டுமே 60 ரன்களுக்கு குறைவாக விட்டுக் கொடுத்தார். இதனால் வாசிங்டன் சுந்தர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் தனது திறமையை நிரூபித்து இருந்தாலும் தற்போது ஒரு நாள் போட்டியின் தாக்கத்தை ஏற்படுத்தி இருகிறார். இருப்பினும் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. ஜடேஜாவை போல் அவரும் கடந்த ஒரு ஆண்டுகளில் பலமுறை காய்கறிந்திருக்கிறார். தனது உடல் தகுதியை மட்டும் வலுப்படுத்தினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் சூழல் உருவாகும்.