ஜடேஜா-சிஎஸ்கே விவகாரம் சுமூகமாக முடிந்தது இப்படித்தான் – தோனிக்கு தலைவணங்கி ட்வீட் போட்ட ஜட்டு!

0
1434

ஜடேஜா மற்றும் சிஎஸ்கே இரு தரப்பிற்கும் இடையே நடந்த மனக்கசப்பில் தலையிட்டு சுமூகமாக முடித்திருக்கிறார் தோனி. இதற்கு நன்றி கூறும் விதமாக ஜடேஜா தலைவணங்கி ட்வீட் போட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். முதல் எட்டு போட்டிகள் முடிவில் 6 போட்டிகளில் தோல்வி 2 போட்டிகளில் வெற்றி என இருந்ததால் திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகிவிட்டார்.

- Advertisement -

மீதம் இருந்த போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்று தோனி வழிநடத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஜடேஜா இரு தரப்பிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் சென்னை அணியின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்பாலோ செய்திருக்கிறார் ஜடேஜா. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, இனி ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்க மாட்டார் என்ற முடிவுக்கு பலரும் வந்து விட்டனர்.

- Advertisement -

ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு தோனி இந்த விவகாரத்தில் தலையிட்டு, சென்னை அணிக்கு ஜடேஜா எவ்வளவு முக்கியம்? மற்றும் ஜடேஜாவை வைத்து என்னென்ன திட்டங்கள் இருக்கிறது? என நீண்டநேரம் பேசியுள்ளார்.

அதன்பிறகு சிஎஸ்கே மற்றும் ஜடேஜா இரு தரப்பிற்கும் இடையே மனக்கசப்பு நீங்கி, சிஎஸ்கே அணியில் இருப்பதாக ஜடேஜா ஒப்புக்கொண்டார்.

ஒவ்வொரு அணியும் தக்கவைத்த மற்றும் வெளியேற்றிய வீரர்களின் பட்டியல் வெளியிட்டது. அப்போது ட்விட்டரில் தோனிக்கு சூசகமாக நன்றி கூறி இருக்கிறார் ஜடேஜா. மேலும் அதில், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.