ஜடேஜா வந்ததால் எனக்கு ஈஸியான பந்துகள் கிடைத்தது – கே.எல்.ராகுல் சுவாரசிய பேட்டி!

0
6636
K. L. Rahul

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மிக முக்கியமான தொடராக ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இருந்தது. இந்த தொடரின் முடிவில் இரு அணிகளுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதியை எட்டின!

இதற்கடுத்து ஆஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்தது.

- Advertisement -

ரோகித் சர்மா குடும்ப நிகழ்ச்சி காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத காரணத்தால் கேப்டன் பொறுப்பு ஏற்ற துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைக்க, ஆஸ்திரேலியா அணி 188 ரன்களுக்கு சுருண்டது. சமி, சிராஜ் தலா மூன்று விக்கட்டுகள் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்சல் மார்ஷ் 81 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து இந்திய அணி 100 ரன்களை எட்டுவதற்குள் 83 ரன்களில் 5 விக்கெட்டுகள் காலியாக அதற்குப் பிறகு கே எல் ராகுல் ரவீந்திர ஜடேஜாவை இணைத்துக் கொண்டு மிக பொறுப்பாக விளையாடி அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்.

இந்த போட்டியில் அவர் 91 பந்துகளில் 75 ரன்கள் 8 பவுண்டரி மற்றும் ஒரு சித்தர் உடன் எடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்ம் 3 வடிவத்தில் கேட்டாலும் சரியில்லாமல், நடந்து முடிந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடும் அணியில் இடத்தை இழந்த கே எல் ராகுல், தற்பொழுது ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக திரும்பி வந்து இருக்கிறார்.

- Advertisement -

போட்டி நடந்து முடிந்ததும் பேசிய கேஎல்.ராகுல் “ஸ்டார்க் பந்தை மிக நன்றாக ஸ்விங் செய்தார். அவர் பந்தை உள்ளே கொண்டு வரும் பொழுது அவர் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர். நான் சாதாரண கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே விளையாட முடிவு செய்தேன். சில பௌண்டரிகள் நான் நன்றாக செட்டிலாக உதவியது. நான் கில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா உடன் பேட்டிங் செய்தேன். விக்கெட்டில் கொஞ்சம் உதவி இருக்கிறது என்று பேச்சு இருந்தது. ஆனால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரை மட்டும் தேர்ந்தெடுத்து விளையாட விரும்பவில்லை. நாங்கள் நேர்மறையாகவே இருக்க விரும்பினோம்! என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” எங்களது புட் வொர்க் நன்றாக இருந்தால் நாங்கள் நன்றாக விளையாட முடியும். மேலும் ஜடேஜா உடன் பேட்டிங் செய்வது வேடிக்கையாக இருந்தது. அவர் விக்கட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடினார். இடது கை பேட்டரான அவர் உள்ளே வந்தவுடன் எனக்கு சில சுலபமான பந்துகள் கிடைத்தது. இது எவ்வளவு பெரிய சிறப்பான பந்துவீச்சாளர்களுக்கும் நடக்க கூடியதுதான். ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் அவருக்கு இந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும்!” என்று கூறினார்.

இந்திய பந்துவீச்சாளர்கள் பற்றி பேசிய அவர் ” போட்டி தொடங்கும் பொழுது ஆடுகளம் இவ்வளவு சாதகமாக பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சமி தனது இரண்டாவது ஸ்பெல்லுக்கு திரும்பி வந்ததும் அதிசயங்களை செய்தார். வெற்றி பெற விரும்பும் எந்த அணியும் மிடில் ஓவர்களில் விக்கட்டுகளை பெற வேண்டும். பவுன்ஸ் இருக்கும் பொழுது விக்கெட் கீப்பிங் செய்வது எனக்கு பிடிக்கும். பவுன்ஸ் குறைவாக இருக்கும் பொழுது விக்கெட் கீப்பிங் சவாலானது. மேலும் அது உடல் ரீதியாகவும் சவாலானது. இது இல்லாமல் பந்து அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. நான் வான்கடேயில் விளையாடுவதை ரசிக்கிறேன்!” என்று கூறி முடித்தார்!