இந்திய கிரிக்கெட்

7 ரன்னில் ஆல் அவுட்.. ஆண்கள் சர்வதேச டி20 வரலாற்றில் மோசமான சாதனை.. டி20 உலக கோப்பை தகுதி சுற்று

ஆண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நைஜீரிய அணிக்கு எதிரான போட்டியில் ஐவரி கோஸ்ட் அணி ஏழு ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை செய்திருக்கிறது.

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு, ஆப்பிரிக்க ரெஜினல் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தான் ஐவரி கோஸ்ட் அணி மிக மோசமான சாதனையை படைத்திருக்கிறது.

அதிரடி காட்டிய நைஜீரிய அணி

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற நைஜீரியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. நைஜீரியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுலைமான் ரன்சிவி 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் செலிம் சலாவ் அதிரடியாக சதம் அடித்து 53 பந்தில் 112 ரன்கள் குவித்தார்.

இதைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் கேப்டன் சில்வெஸ்டர் ஒக்பே 23 பந்தில் அதிரடியாக 65 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் நைஜீரிய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது. ஐவரி கோஸ்ட் பந்து வீச்சில் பம்பா டிமிட்ரி நான்கு ஓவர்களுக்கு 45 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

மோசமான சாதனை படைத்த ஐவரி கோஸ்ட்

இதைத்தொடர்ந்து விளையாடிய ஐவரி கோஸ்ட் அணி 7.3 ஓவர்களில் வெறும் ஏழு ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமத் 4 ரன்கள் எடுத்தார். மேலும்அந்த அணியில் ஏழு பேர் ரன்கள் எதுவும்எடுக்கவில்லை. நைஜீரிய பந்துவீச்சில் இஷாக் டன்டில் மற்றும் பிராஸ்பர் உசைனி தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : இந்தியா வெற்றி.. மாறிய WTC பாயிண்ட்ஸ் டேபிள்.. ஆஸி அணிக்கு சரிவு.. பைனலுக்கு 5 அணிகள் கடும் போட்டி

ஆண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மங்கோலியா மற்றும் இஷால் ஆப் மென் அணிகள் 10 ரன் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது மிகக் குறைந்த ரன்னுக்கு ஆல் அவுட் ஆன விதத்தில் மோசமான சாதனையாக இருந்தது. தற்போது இந்த மோசமான சாதனையை உடைத்து ஐவரி கோஸ்ட் அணி முதல் முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆல் அவுட் ஆகி பெரிய மோசமான சாதனையை படைத்திருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: T20I