“இந்த இளம் வீரரை இப்படி ஏமாற்றுவது சரியல்ல” – தேர்வு குழுவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

0
269

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் நிசான் கிசான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .

ஆஸ்திரேலியா அணியானது பிப்ரவரி மாத முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் மட்டும் மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது . இதில் டெஸ்ட் தொடருக்கான அணியை இந்திய அணியின் தேர்வு குழு நேற்று அறிவித்தது

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடை இருக்கிறது . அந்த இரண்டு தொடர்களுக்குமான அணியையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை நேற்று அறிவித்தது பிசிசிஐ ..

இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்டுக்கு பதிலாக இசான் கிசான் முதல் முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . மேலும் இந்திய அணியின் ஸ்டார் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவும் அணியில் இடம் பெற்று இருக்கிறார் . ஆஸ்திரேலியா அணிக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் நிச்சயமாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சர்ப்ராஸ் கான் இடம்பெறவில்லை .

இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ள ஆகாஷ் சோப்ரா கடந்த இரண்டு சீசன்களாக ரஞ்சி ராபியில் அதிகமான ரன்களை குவித்தவர் சர்ப்ராஸ் கான் நியாயமாக அவரைத்தான் அணியில் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.ஆனால் இந்தியா சூரியகுமார் யாதவை தேர்வு செய்துள்ளது . முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட் மேனுக்கு அடுத்தபடியாக 80 சராசரி வைத்திருக்கக்கூடிய பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான்.

- Advertisement -

2020 ஆம் ஆண்டு ரஞ்சித் தொடர்களில் 900 வருடங்களுக்கு மேல் எடுத்த அவர் 2021 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பைகளிலும் 900 ரன்கள் எடுத்து இரண்டு சீசன்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் . மேலும் இராணி டிராபியிலும் திலீப் டிராபியிலும் சதங்களை அடித்தார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சி சீசனிலும் இதுவரை இரண்டு சதங்களை அடித்திருக்கிறார் .

ஒரு வீரராக அவர் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் .ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி தொடர்ச்சியாக திறமையான ஆட்டங்களை வெளிப்படுத்தியும் அவரை அணியில் சேர்க்காதது அந்த வீரரை ஏமாற்றுவதை போல் உள்ளது என்று ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். தொடர்ச்சியாக ரஞ்சி கோப்பையில் ரண்களை குறித்து வரும் ஒரு வீரரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது என சாடியுள்ளார் ஆகாஷ் சோப்ரா .