“ஒரு வீரர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்காக அவரை ஆட வைக்க வேண்டும் என்று அவசியமில்லை” – முன்னாள் தேர்வு குழு தலைவர் சர்ச்சை கருத்து!

0
104

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற இருக்கிறது .

இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி யார் தொடரை வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கிறது . முதல் இரண்டு போட்டிகளுக்குமான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டியின் ஆடுகளத்தின் தன்மை பற்றிய எதிர்பார்ப்பும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்தே இந்திய அணி சுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகியோரை துவக்க ஆட்டக்காரர்களாக பயன்படுத்தி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் இந்த இருவரும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை . இதனால் மூன்றாவது டி20 போட்டியில் கில்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ப்ரீத்தி ஷா அணியில் இடம்பெற வேண்டும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

இந்த சூழ்நிலையில் கில் மற்றும் இசான் கிசான் இவர்கள் இருவருமே மூன்றாவது டி20 போட்டியில் துவக்க வீரர்களாக ஆட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக இந்தியா நியூஸ் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ” ப்ரித்வி ஷாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயமே . அவர் ஒரு திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை . அணிக்கான சூழ்நிலையுடன் பயணிப்பது அவரை ஒரு சிறந்த வீரராக மேம்படுத்தும் . மேலும் ராகுல் டிராவிட்டின் கண்காணிப்பின் கீழ் இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு அவர் நல்ல திறமையான வீரராக வர”இது உதவும் என்று கூறினார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” கில் மற்றும் இசான் கிசான் ஆகியோர்தான் இந்த போட்டியிலும் தொடர்ந்து ஆட வேண்டும் என நான் கருதுகிறேன் . அவர்கள் இருவருக்கும் இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் . ஐந்து அல்லது ஆறு போட்டிகளைக் கொண்டு அவர்களை நாம் முடிவு செய்யக்கூடாது . தற்போது இன்று நடைபெறும் போட்டியில் அவர்கள் இருவரும் அதிகமான ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவலாம். அதன் மூலம் துவக்க வீரர்களுக்கான பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரலாம் . அதனால் தற்போது துவக்க வீரர்களாக ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் சில போட்டிகளிலும் வாய்ப்பு அளிப்பது முக்கியமானது”என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ” ப்ரீத்வி இன்னும் சிறிது காலம் அணியில் தனது வாய்ப்பிற்காக காத்திருப்பது அவரை ஒரு முதிர்ச்சி அடைந்த வீரராக மாற்றும்” என்று தெரிவித்த சபா கரீம் ” அவரை கட்டாயம் இந்த போட்டியில் ஆட வைத்தே ஆக வேண்டும் என்ற எந்த தேவைகளும் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறி முடித்தார் .