புஜாரா மற்றும் ரஹானேவின் எதிர்காலம் குறித்து கேப்டன் விராட் கோஹ்லி ஆவேசப் பேச்சு

0
2773
Virat Kohli about Rahane and Pujara

இந்திய அணி தென் ஆபிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. 3 டெஸ்ட் போட்டிகளாக இந்த தொடர் நடைபெற்றது. இதுவரையில் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனையுடன் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அதேபோல விளையாடி தொடரைக் கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி பெற்று தொடரை இழந்துள்ளது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே புஜாரா மற்றும் ரகானே இருவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனாலும் இந்திய அணி இருவரையுமே 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வைத்தது.

ஆனால் இருவருமே இந்த தொடரில் பிரமாதமான ஆட்டம் எதையும் வெளிப்படுத்தவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருவரிடமிருந்தும் அரைசதம் வந்தாலும் அதில் வெற்றி பெற போதுமானதாக இல்லை. முக்கியமான 3-வது டெஸ்ட் போட்டியிலும் இருவரிடமிருந்தும் பெரிதாக ரன்கள் வரவில்லை. இதுவும் போக ஆட்டத்தின் முக்கியமான இடத்தில் புஜாரா முக்கியமான கேட்ச் ஒன்றை தவற விட்டார். ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ரஹானேவிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்க பட்டது. அப்போதே இதுதான் இருவருக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடத் தொடங்கியது.

தற்போது முக்கியமான தொடரை தோற்ற பின்பு இருவரின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் கேப்டன் கோலியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கோடி இவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிக் கூறுவது என்னுடைய வேலை இல்லை என்றும் அது தேர்வுக் குழுவின் வேலை என்றும் கூறியுள்ளார் கோலி. மேலும் இதுவரை இவர்கள் டெஸ்ட் போட்டிகளில் சாதித்ததை மனதில் வைத்துதான் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். அவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டதால் தான் இருவருமே 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதாகவும் கூறினார் கோலி. அணிக்கு இது போன்ற பங்களிப்புகள் தான் தேவை என்றும் தேர்வுக்குழுவின் மனதில் என்ன இருக்கிறது என்பது குறித்துப் பேச இது சரியான இடம் இல்லை என்றும் விராட் கோலி பேசியுள்ளார். ஜாவா மற்றும் ரகானே நீக்கப்பட்டால் அவர்களது இடத்தில் எந்த இளம் வீரரை இந்திய அணி கொண்டுவரும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்