“இது சரிப்பட்டு வராது.. மோர்கன்கிட்ட இருந்த தைரியம் பட்லர்கிட்ட கிடையாது.. இதான் பிரச்சனை!” – நாசர் ஹுசைன் கடுமையான விமர்சனம்!

0
418
Buttler

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, அரையிறுதி வாய்ப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

நேற்று போட்டி நடைபெற்ற மும்பை மைதானம் கடலை ஒட்டி இருக்கின்ற காரணத்தினால் வெப்பமும் ஈரப்பதமும் மிக அதிகமாக இருந்தது. இது இங்கிலாந்து மாதிரியான ஒரு நாட்டிற்கு மிகவும் அந்நியப்பட்ட தட்பவெப்ப நிலை.

- Advertisement -

இப்படி இருக்கும் பொழுது டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கொளுத்தும் வெயிலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது அந்த அணியின் ஒட்டுமொத்த செயல் திறனையும் பாதித்தது.

களத்தில் நின்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் கிளாஸனால் கூட வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகவும் களைப்படைந்து, மேலும் தசைப்பிடிப்புகளால் பாதிக்கப்பட்டார்கள்.

இது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் எடுத்த மிகப்பெரிய தவறான முடிவாக நேற்றைய போட்டியில் அமைந்தது. இதை இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் போட்டி முடிந்த பிறகு ஏற்றுக்கொள்ளவே செய்தார். இங்கிலாந்தின் இந்த முடிவு தென் ஆப்பிரிக்காவை ஆச்சரியப்படுத்தியது என்று கேப்டன் மார்க்ரம் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இது குறித்து பேசும்பொழுது “டாஸ் பற்றி எடுத்த முடிவும் விளையாடும் அணியை தேர்ந்தெடுத்த விதமும் மிக தவறாக இருந்தது. அணியில் உரிய நேரத்தில் மூன்று மாற்றங்களை செய்தது இதுவரை விளையாடி வந்த விதத்திற்கு முற்றிலும் விலகி செல்வதாக இருந்தது.

வோக்ஸ் ரிதத்தில் இல்லை. எனவே அவரது இடத்தில் பென் ஸ்டோக்ஸ் கொண்டுவரப்பட்டதை புரிந்து கொள்கிறேன். ஆனால் டாஸ் குறித்து எடுத்த முடிவும் புள்ளி விபரங்களை இவ்வளவு நம்புவதும் எனக்கு பிடிக்காத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இங்கிலாந்து அணிகள் நேற்று பலர் சிரமப்பட்டு கொண்டிருந்ததால் கேப்டன் பட்டிலருக்கு ஒரு நல்ல நாளாக அமையவில்லை என்று நினைக்கிறேன். அந்த அணியில் ஏறக்குறைய எல்லோருமே காயத்தால் அவதிப்பட்டு கொண்டிருந்தார்கள். இதனால் பட்லருக்கு யாரிடம் செல்வது என்று தெரியவில்லை.

இங்கிலாந்து களத்திற்கு வெளியே எடுக்க முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும். அவர்களுடைய செயல்திறனின் தரம் போதுமானதாக இல்லை. புள்ளி விபரங்களை நம்புவது சரியல்ல. முன்னாள் கேப்டன் மோர்கன் புள்ளிவிபரங்களை நம்புவார். அதன்படி செயல்படுவார். ஆனால் களத்தில் முடிவுகள் மிகத் தைரியமாக இருக்கும். இப்படி இருக்காது!” என்று கூறி இருக்கிறார்!