“இது அவுட்டே கிடையாது.. நடுவர்கள் ஷாகிப் செய்தது ஏற்க முடியாது!” – கொந்தளித்த தமிழக வீரர்கள்!

0
1299
Vijay

இன்று கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேட்ஸ்மேன் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்து உலகக்கோப்பை தொடரில் வெளியேறியது பரபரப்பாக மாறியிருக்கிறது.

இன்று உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் சதிரா ஆட்டம் இழந்து வெளியேற, அஞ்சலோ மேத்யூஸ் உள்ளே வந்தார்.

- Advertisement -

மேற்கொண்டு அவர் கிரீசுக்கு சென்று விளையாட தயாராகி ஹெல்மெட்டை சரி செய்யும் பொழுது அதன் உள்பட்டை பிய்ந்தது. இதன் காரணமாக அவர் தன்னுடைய அணியினரிடம் வேறொரு ஹெல்மட்டை கொண்டு வரச் சொன்னார்.

இந்த நேரத்தில் ஒரு பேட்ஸ்மேன் உள்ளே வந்து இரண்டு நிமிடங்களுக்குள் விளையாட தயாராகி விட வேண்டும், இல்லையென்றால் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்படும் என்கின்ற விதியின் அடிப்படையில், நடுவரிடம் முறையிட்டு அவரை களத்தை விட்டு பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் வெளியேற்றினார்.

இதன் காரணமாக களத்தில் பரபரப்பு நீடித்தது. மேலும் பல முன்னாள் வீரர்களும் இது குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். பெரும்பாலான கருத்துகள் ஷாகிப் முடிவுக்கு எதிரானதாகவே இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறும் பொழுது “அவர் சரியான நேரத்திற்கு களத்திற்கு வந்து விட்டார். மேலும் ஹெல்மெட் அங்கேயே சரியாக இல்லை என்று அவருக்கு தெரியாது. ஏனென்றால் இங்கு உள்ளே வந்து ஹெல்மெட்டை இறுக்கும் பொழுதுதான், அந்த பட்டை பிய்ந்தது. இப்படி இருக்கும் பொழுது அவர் உள்ளே இருந்து சரியாக கொண்டு வர வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும்? இது நிச்சயம் தவறான முடிவு. ஷாகிப் இப்படி செய்திருக்கக் கூடாது!” என்று கூறி இருக்கிறார்!

இன்னும் ஒரு தமிழக வீரரான முரளி விஜய் கூறும் பொழுது “இது முழுக்க ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு எதிரானது. ஷாகிப் இப்படி செய்திருக்கவே கூடாது. நான் அவருடன் பழகவும் செய்து இருக்கிறேன். ஆனாலும் கூட சொல்கிறேன் அவர் செய்தது தவறானது!” என்று கூறி இருக்கிறார்!