மும்பை அணிக்காக ஆடுவது எனது கனவு – பேபி ஏபிடி பேட்டி!

0
3162

மும்பை அணிக்காக விளையாடுவது எனது கனவு என்று பேட்டி அளித்திருக்கிறார் குழந்தை ஏபிடி என அழைக்கப்படும் டெவால் பிரவீஸ்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு அடுத்த தலைமுறை வீரராகவும், லெஜன்ட் டி வில்லியர்ஸ் இடத்தை நிரப்புவதற்கு சரியான வீரர் என்றும் கருதப்படும் டெவால் பிரவீஸ், உலகின் பல்வேறு டி20 லீக்கில் விளையாடி வருகிறார். பல அணிகளும் இவரை தங்களது சொத்தாக பார்க்கிறது.

மிகச் சிறிய வயதில் அபாரமாக செயல்பட்டு வரும் இவர், 360 டிகிரி ஷார்ட்களை லாவகமாக அடிக்கிறார். ஒரு சில பலவீனங்கள் இவருக்கு இருந்தாலும், இளம் வயது என்பதால் விரைவாக அதை சரி செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணிக்கு எடுக்கப்பட்டார். நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக்கில் மும்பை அணிக்கு சொந்தமான அணியில் விளையாடுகிறார்.

இந்நிலையில் மும்பை அணியில் விளையாடி வருவது குறித்து தனது சமீபத்தில் பேட்டியில் அவர் கூறியதாவது:

“மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. நான் சிறுவயதில் இருந்தே மும்பை அணி மீது ஆர்வம் கொண்டு ஐபிஎல் போட்டிகளை பார்த்து வருவேன். அவர்கள் என்னை ஏலத்தில் எடுத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மும்பை அணிக்காக விளையாடிது தற்போது வரை பெருமிதமாக இருந்தது. பல்வேறு ஜாம்பவான்கள் உடன் மற்றும் மும்பை மைதானத்தின் ரசிகர்கள் மத்தியில் விளையாடியது இன்னும் பெருமிதமாக இருந்தது.

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் லீக் போட்டியில் மீண்டும் ஒருமுறை மும்பை அணிக்காக விளையாடுவது என் ஆவலை தூண்டி இருக்கிறது. சவுத் ஆப்பிரிக்கா ரசிகர்களும் எனது ஆட்டத்தை கண்டு மகிழ்வார்கள் என நினைக்கிறேன். தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நிச்சயம் எனது பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை கொண்டு அவர்களை மகிழ்விப்பேன்.” என நம்புகிறேன் என்றார்.