டாஸ் வென்றப் பின் சென்னை அணி குறித்து அன்பான வார்த்தைகள் பகிர்ந்த ஃபாப் டு பிளசிஸ்

0
370
Ravindra Jadeja and Faf du Plessis

இன்று இரவு ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர். போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த ஃபேப் டு பிளேசிஸ் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் அவரை 7 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது.

- Advertisement -

அவரது தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியுடன் புள்ளி பட்டியலில் தற்போது 3வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் நான்கு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றது.

என்னுடைய சகோதர்களுடன் விளையாடுவது போல் உணர்கிறேன்

போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ் நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கிறோம் என்று கூறினார். மேலும் பேசிய அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கின்றன, அதையே இன்று நாங்களும் தேர்வு செய்கிறோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி எனக்கு நன்கு தெரியும் அதே போல என்னைப் பற்றி அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். இன்றைய போட்டியில் நான் என்னுடைய சகோதரர்களுடன் விளையாடுவது போல் உணர்கிறேன். பந்துவீச்சில் நாங்கள் கடந்த போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

- Advertisement -

டெத் ஓவர்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. ஜோஸ் ஹெசல்வுட் இன்றைய போட்டியில் விளையாட இருக்கிறார், அவருடைய விளையாட்டை காண ஆர்வமாக இருக்கிறோம். அதேபோல உற்சாகமான இளம் வீரர் ஒருவரை (சுயாஸ் பிரபுதேசாய்) நாங்கள் இன்று அறிமுகம் செய்ய இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.