“கனவு மாதிரி இருக்குதுங்க.. இவங்க இல்லாம இது சாத்தியம் இல்லை!” – ருதுராஜ் ஜெய்ஸ்வால் சிறப்பு பேட்டி!

0
1999
Ruturaj

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறது!

இந்த டி20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை ஆகிய நான்கு அணிகளும் காலிறுதி சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றன. மற்ற அணிகள் லீக் சுற்றில் விளையாடின.

- Advertisement -

இந்திய அணி காலிறுதியில் நேபாள், அரையிறுதியில் பங்களாதேஷ் ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று இரண்டு அணிகளும்
மோதிக்கொண்ட போட்டியில் இந்திய அணி முதலில் டாசில் வெற்றி பெற்று பந்து வீசியது. ஆப்கானிஸ்தான் 18.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்த பொழுது குறிப்பிட்ட மழை அதற்குப் பிறகு நிற்கவேயில்லை.

இதன் காரணமாக போட்டி அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டு இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது. காரணம் இந்திய அணி நாக் அவுட் சுற்றில் புள்ளி பட்டியலில் மிகவும் வலிமையான இடத்தில் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தங்கப் பதக்கத்தை வென்ற கேப்டன் ருதுராஜ் கூறுகையில்
“எதிர்பாராத ஒரு நிகழ்வில் ஒரு பகுதியாக இருப்பதுமகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்த இந்திய தேர்வாளர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டுக்கும் என்னுடைய நன்றி.

இந்தத் தொடரில் ஈடுபட்ட 15 வீரர்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட துணை ஊழியர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லோரும் இல்லாமல் இது சாத்தியம் கிடையாது. தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நின்றது, அப்படிப்பட்ட உணர்வுகளுக்கு இதுவரையில் பழக்கப்பட்டது கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!

இதுகுறித்து ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “இது ஒரு அற்புதமான உணர்வு. இது மிகவும் நன்றாக இருக்கிறது. அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சி செய்கிறேன். மேலும் என்னால் முடிந்த அனைத்தையும் வெளிப்படுத்தவும், அச்சமின்றி மகிழ்ச்சியாக அணிக்காக விளையாடவும் முயற்சி செய்கிறேன்.

நாங்கள் ஒரு அற்புதமான முகாமை நடத்தினோம். பிசிசிஐ மற்றும் எங்களுக்காக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!