விராட் கோலி எதிர்காலம் எப்படி இருக்கு? சாகித் அப்ரிடி சொன்ன அந்த 5 வார்த்தை – ட்விட்டரில் நடந்த வார்த்தை போர்!

0
141

ட்விட்டரில் கோலியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு ஐந்து வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார் பாகிஸ்தான் முன்னால் கேப்டன் சாகித் அப்ரிடி.

இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. கடந்த முறை இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன் பிறகு இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

குறிப்பாக கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்திய அணியின் பந்து வீச்சிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, இளம் வீரர்களுக்கும் தற்போது தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆல்ரவுண்டர்கள் சிலர் மாற்றப்பட்டு இருக்கின்றனர். பேட்டிங் டாப் ஆர்டரில் பெரிதளவில் மாற்றம் இல்லை. விராட் கோலி பேட்டிங் மட்டுமே தற்போது இந்திய அணிக்கு கவலைக்கிடமாக இருக்கிறது.

கோலியின் பார்ம் கடந்த சில வருடங்களாக மோசமாக இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக இருப்பதில் சந்தேகம் இல்லை. தனது பேட்டிங்கில் இருண்ட காலத்தை சந்தித்து வருகிறார் என்று கூறினால் மிகையாகாது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் நாட்களுக்கு மேலாக சதம் அடிக்கவில்லை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆசியகோப்பை தொடரில் அவர் கட்டாயம் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார். எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்றால் டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாகி விடும். சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்கள் அடித்திருக்கும் வீரரை வெளியில் அமர்த்துவது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதால் மட்டுமே தொடர்ந்து அவர் இடம்பெற்று வருவதாக யூகிக்கப்படுகிறது. இவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பலரும் பலவிதமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ட்விட்டர் பக்கத்தில் சாகித் அப்ரிடி இடம் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஐந்தே வார்த்தைகளில் அவர் பதில் அளித்திருக்கிறார். “அது அவரது கையில் தான் இருக்கிறது” என பதில் கூறியுள்ளார்.

- Advertisement -

சுமார் 1000 நாட்களுக்கும் மேலாக அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, “கடினமான சூழல்தான் மிகப்பெரிய பிளேயரையா காணாமல் செய்துவிடுகிறது.” என்று அட்டகாசமாக பதில் அளித்தார்.

விராட் கோலி தனது பேட்டிங்கை சரிசெய்துகொள்ள தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நிச்சயம் ஆசிய கோப்பையில் அவர் மிக சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் சில சாதனைகளையும் விராட் கோலி படைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து தக்கவைப்பார் என்றும் சில கணிப்புகள் வெளி வருகின்றன.

உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி காயத்திலிருந்து இன்னும் குணம் அடையாததால் ஆசியக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மன்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஒருவர் கருத்து தெரிவித்து இந்திய ரசிகர்களிடம் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்திற்கு உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.