ரோகித் சர்மா செயல்படும்விதம் எரிச்சலாக இருக்கிறது – புள்ளி விவரத்துடன் விமர்சித்த ரவி சாஸ்திரி!

0
2545

இந்திய அணியில் முன்னணி வீரர்களை ரோகித் சர்மா கையாளும் விதம் எரிச்சல் ஊட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

உலக கோப்பை, ஆசிய கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களுக்கு முன்பாக முன்னணி இந்திய வீரர்கள் சிலர் காயம் ஏற்படுவதால் இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைகிறது. ஜடேஜா, ஆசிய கோப்பை தொடரின் போது காயத்தினால் விலகினார். அவர் அதற்கு முன்னர் பெரிதளவில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதேபோல் பும்ரா காயத்தில் இருந்தார். குணமடைந்து வந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடினார். உடனடியாக மீண்டும் காயத்தினால் டி20 உலக கோப்பையில் இருந்து விலகி இருக்கிறார்.

அதற்கு முன்னர் தீபக் சகர் காயத்தில் இருந்தார். மீண்டும் வந்த பிறகு ஒரு டி20 தொடரில் மட்டுமே பங்கேற்றார். உடனடியாக மீண்டும் காயத்திற்கு ஆளானார். டி20 உலக கோப்பை அணியில் ரிசர்வ் வரிசையில் இருந்த இவருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்று அவ்வப்போது முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக உள்ளே வருவதும் போவதுமாக இருக்கின்றனர்.

முன்னணி வீரர்களை கேப்டன் ரோகித் சர்மா கையாளும் விதம் முற்றிலும் சரியில்லை. எரிச்சல் ஊட்டும் விதமாக இருக்கிறது என கடுமையாக சாடியுள்ளார் ரவி சாஸ்திரி.

“மிகப்பெரிய தொடர்களுக்கு முன்பு முன்னணி வீரர்களை காயத்தினால் இழப்பது தொடர்ந்து எரிச்சல் ஊட்டுகிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர்களில் புவனேஸ்வர்குமார் காயம் காரணமாக இடம் பெறவில்லை. கடந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு பும்ரா ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். ஆனால் நீண்ட நாட்கள் காயத்தினால் வெளியில் இருக்கிறார். தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பெற போராடிவரும் தீபக் சகர் தற்போது காயத்தினால் இருக்கிறார். ஜடேஜாவும் சமீபகாலமாக அதிக அளவில் காயம் ஏற்படுகிறது.

ரோகித் சர்மா இதை முழு கவனத்துடன் கையாள வேண்டும். புள்ளி விவரங்களை பார்க்கும் பொழுது பெரிய அளவில் போட்டிகள் விளையாடாத வீரர்களும் காயத்தினால் இருப்பது சற்று கவலைக்குரியதாக இருக்கிறது. இதை முக்கியமான விஷயமாக எடுத்துக் கொண்டு கவனம் செலுத்துங்கள்.” என அறிவுறுத்தினார்.