“இது வேற லெவல்”!- ஏபி.டிவில்லியர்ஸை கலாய்த்த டிகே!

0
147

இலங்கை அணியானது கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வந்தது . இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி ஒரு நாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் தோற்று ஒயிட் வாஷ் ஆனது .

நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று உலக சாதனை படைத்தது . இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் . இதில் 8 சிக்ஸர்களும் 12 பவுண்டரிகளும் அடங்கும்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இருந்து பார்முக்கு திரும்பியுள்ளார் விராட் கோலி. கடந்த நான்கு போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும் . விராட் கோலி தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பி இருப்பதை ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கொண்டாடி வருகின்றனர் .

இந்நிலையில் விராட் கோலியின் நண்பரும் முன்னாள் ஆர்சிபி வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியை பாராட்டி நேற்று ட்வீட் செய்திருந்தார் .அந்த ட்வீட்டை ஷேர் செய்து நட்பாக கலாய்த்து இருக்கிறார் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் .இவரும் ஆர்சிபி அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஏபி.டிவிலியர்ஸ் வீட்டை ஷேர் செய்துள்ள தினேஷ் கார்த்திக் “இது வேற லெவல் என தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார் . மேலும் இந்த வேற லெவலுக்கான அர்த்தத்தை இந்தியா வரும்போது விராட் கோலி இடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் என அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் . ஐபிஎல் காக இந்தியா வரும் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்”எனவும் தெரிவித்திருக்கிறார் .

ஏபி.டிவில்லியர்ஸ் ஐபிஎல் போட்டிகளில் வீரராக ஆடவில்லை என்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஏதேனும் ஒரு முக்கிய பொறுப்பில் பணியமறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஆர் சி பி அணிக்காக ஃபினிஷர் ஆக ஆடிக் கொண்டிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.