அந்தத் தொடர ஜெயிக்கிறது அவ்ளோ ஈஸியான வேலை இல்லை – காரணத்தை விளக்கிய தினேஷ் கார்த்திக்

0
149

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களை முடித்துக் கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் ஆட இருக்கிறது இந்திய அணி . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த தொடரானது இந்திய அணிக்கு முக்கியமானது

ஆஸ்திரேலியா அணியுடன் இந்த டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் ஆவது வெற்றி பெற்றாள் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் இதனால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது .

சொந்த மண்ணில் ஆடுவது இந்திய அணிக்கு பலம் என்றாலும் தற்போது ஆஸ்திரேலியா அணியும் அபாரமாக ஆடி வருகிறது . அந்த அணி கடந்த காலங்களில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது . சுழற்பந்துவீச்சை சிறப்பாக ஆடும் ஸ்டீவன் ஸ்மித்,மார்னஸ் லபுசேன், டிராவஸ் ஹெட், உஸ்மான் குவாஜா போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர் . இதனால் இந்த தொடர் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

இந்தத் தொடரை பற்றி பேசியுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலான ஒன்று . இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்லாமல் பேட்ஸ்மன்களுக்கும் இந்த தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கூறினார் .

இந்தத் தொடரை பற்றி தொடர்ந்து பேசிய கார்த்திக் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சமீப காலங்களில் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆட்டம் இழந்து வருவதை சுட்டிக்காட்டி உள்ளார். தற்போது நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கூட மெஹதி ஹசன் பந்துவீச்சில் தடுமாற்றத்துடனே ஆடியதை குறிப்பிட்டு பேசிய கார்த்திக் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக தங்களுடைய பலவீனத்தை எதிரணியினருக்கு காட்டுகின்றனர் . இதனை ஆஸ்திரேலிய தொடரில் சரி செய்து கொண்டு ஆட வேண்டும் . ஆஸ்திரேலியா அணியின் நேதன் லயனுக்கு எதிராக எப்படி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்து தான் இந்தத் தொடரின் வெற்றி வாய்ப்பு அமையும் என்று குறிப்பிட்டுள்ளார் .

நேதன் லயன் ஆஸ்திரேலியா அணியின் தலைசிறந்த ஆப் ஸ்பின்னர் . அவரை இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடும் விதம் மிக முக்கியம் . சமீப காலமாக இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆப் ஸ்பின்னர்களிடம் ஆட்டம் இழப்பது தொடர்கிறது என்று குறிப்பிட்டார் . பந்து வீச்சு இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறியவர் இந்தியாவைப் போன்ற பந்து திரும்பு ஆடு களங்களில் அக்சர் பட்டேலை பிரதான பந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார். அவரது உயரம் மற்றும் அவர் பந்தின் வேகத்தை மாற்றி வீசுவது மிகப்பெரிய பலமாக இருக்கிறது . அதனால் ஆடும் லெவனில் கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார் .

இந்தியா ஆஸ்திரேலிய அணி உடனான டெஸ்ட் தொடரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் .