இந்த இந்திய வீரருக்கு காயமானால் எல்லாம் முடிந்தது! – நுட்பமான கருத்தை தெரிவித்த முன்னாள் நியூசிலாந்து வீரர்!

0
1385
ICT

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த உலககோப்பையின் தோல்விக்கு பின் இந்தியா நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது அங்கு மூன்று T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

T20 போட்டிகளுக்கு ஹர்டிக் பாண்டியா கேப்டன் ஆகவும் ஒரு நாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டன் ஆகவும் நியமிக்க பட்டுள்ளார்கள்.இதில் இருந்து இந்திய அணி வேறு வேறு கிரிக்கெட் வடிவ போட்டிகளுக்கு வேறு வேறு கேப்டன்களை நியமிக்க உள்ளதா?,என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.

- Advertisement -

இந்திய,நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நியூஸிலாந்தின் மவுண்ட் மவுனியா என்ற இடத்தில நடை பெற்றது இதில் இந்திய அணி வீரரான சூர்யா குமாரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .

இந்த போட்டியின் முடிவிற்கு பின் நடைபெற்ற கிரிக்கெட் வல்லுனர்களின் உரையாடலின் போது நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரும் பிரபல வர்ணனனையாளருமான சைமன் டௌல் தெரிவித்த கருத்துக்களை பலரும் ஆதரித்து பேசி வருகிறார்கள் .

நேற்று போட்டியின் முடிவுக்கு பின் அவர் அமேசான் ப்ரைம் காணொளியில் பேசும் போது “இந்திய அணியின் பேட்டிங் எப்பொழுதுமே அணிக்கு பலமான ஒன்றாகவே இருந்து இருக்கிறது ஆனால் அணியின் பலகீனமாக அவர்களின் பந்துவீச்சுதான் ,அதனை சரி செய்ய அணியின் பகுதி நேர பந்து வீச்சாளர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்”

- Advertisement -

மேலும் அவர் இது குறித்து பேசும் போது “அணியின்பேட்ஸ்மேன்களான ஷ்ரேயஸ் ஐயர் போன்றோர் பந்து வீச்சிலும் தங்களின் பங்களிப்பை அணிக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்”.

இது குறித்து அவர் விளக்கமாக பேசுகையில் “ஆட்டத்தின் போது ஹர்டிக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டால் அடுத்து என்ன செய்வது யார் அவருக்கான பந்து வீச்சை பூர்த்தி செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்”.

“இந்திய அணியின் பிரதான பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சை கற்று கொண்டு இக்கட்டான சூழ்நிலையில் அணிக்கு தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் ஷ்ரேயஸ் ஐயர் போன்றோர் பந்து வீச்சிலும் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கூறி முடித்தார்”.

ஆட்டத்தின் முடிவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியாவும் இதே கருத்தை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .
.