இந்த ஐ.பி.எல் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் கவுரவமாக உணர்வேன் – தினேஷ் கார்த்திக் பரவசம்

0
109
Dinesh Karthik IPL

ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் மத்தியில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி அணியில் களமிறங்கி விளையாடினார். 2008 முதல் 2010 வரை டெல்லி அணியில் விளையாடிய பின்னர் 2011ம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடினார்.

பின்னர் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், 2014 ஆம் ஆண்டு மீண்டும் டெல்லி அணியிலும் இடம் பெற்று விளையாடினார். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார்.

- Advertisement -

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு குஜராத் அணியில் விளையாடிய பின்னர் 2018ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு (2021) வரை அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார்.

தமிழக வீரரான அவர் நிறைய அணிகளில் அவர் விளையாடி இருந்தாலும் இதுவரை ஒருமுறைகூட அவர் சென்னை அணியில் விளையாடியதில்லை. இந்நிலையில் தற்போது அவர் சென்னை அணியில் விளையாடுவது குறித்து தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்

இதுவரை 213 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4046 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 25.77 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.72 ஆகும். இதுவரை 19 அரை சதங்கள் இவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிடில் ஆர்டரில் மிக சிறப்பாக விளையாடக் கூடிய திறமை இவரிடம் உள்ளது.

- Advertisement -

ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி விக்கெட் கீப்பராக அணியை வழி நடத்துவதிலும் இவர் நிறைய முறை தன்னுடைய பணியை சரியாக செய்திருக்கிறார். கொல்கத்தா அணியை கேப்டனாக தலைமை தாங்கியும் இருக்கிறார்.

சென்னை அணியில் விளையாட விருப்பம்

நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் சென்னை அணி நிர்வாகம் என்னை கைப்பற்றினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சென்னை அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நான் சிறப்பாக உணர்வேன். இருப்பினும் இறுதியில் எந்த அணி என்னை கைப்பற்றினாலும் எனக்கு சந்தோஷமே. எந்த அணி என்னை கைப்பற்றி நாளும் அதை நான் பெருமையாகவே எடுத்துக் கொள்வேன். அந்த அணிக்காக நான் என்னுடைய முழு பங்களிப்பை வழங்குவேன் என்றும் தினேஷ் கார்த்திக் தற்போது கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நிறைய அனுபவங்கள் உடைய தினேஷ் கார்த்திக் சென்னை அணியில் விளையாடினார் சிறப்பாக இருக்கும் என்று சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். நம் தமிழக வீரரான அவர் சென்னை அணியில் களமிறங்கி விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.