கே.எல்.ராகுலை இந்திய அணியின் ஓப்பனராக உருவாக்கியவர் விராட் கோலி தான் – சோயிப் அக்தர் வெளிப்படைப் பேச்சு

0
47
KL Rahul and Virat Kohli

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிர்ச்சியான இரு விசயங்கள் என்றால், ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் அணிகளான சென்னையும் மும்பையும் ஒருசேரு ஒரு ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்த ஐ.பி.எல் தொடரில் இரு புதிய அணிகளிளான குஜராத், லக்னோ அணிகள் பவர்ப்ளே சுற்றுக்குள் நுழைந்து அசத்தியது. இதில் குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததோடு, இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றிருப்பது!

இந்த ஆண்டிற்கான நடந்து முடிந்த மெகா ஏலத்தின் போது குஜராத் அணி ப்ளேஆப்ஸ் வாய்ப்புக்குள் செல்லும் என்று குஜராத் அணி அல்லாத எந்த கிரிக்கெட் வீரர்களும் கூறவில்லை. ஆனால் லக்னோ அணி ஏலத்தில் சிறப்பாகவே செயல்பட்டிருந்ததால் அந்த அணி மீது எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை லக்னோ அணியும் தன் சிறப்பான செயல்பாட்டால் பூர்த்தியும் செய்திருக்கிறது.

இந்த ஐ.பி.எல் தொடரில் 14 லீக் ஆட்டங்களில் விளையாடி ஒன்பது ஆட்டங்களில் வென்று 18 புள்ளிகளைப் பெற்ற லக்னோ அணி, ரன்ரேட்டின் காரணமாக மூன்றாவது இடத்தைப் பெற்றது. லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வழக்கம் போல இந்த ஐ.பி.எல் சீசனிலும் 14 ஆட்டங்களில் 537 ரன்களை குவித்திருக்கிறார். இதில் மும்பை அணிக்கு எதிராக அடித்த இரண்டு சதங்களும் அடங்கும். 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் இருந்து இதுவரை 500 ரன்களுக்கு கீழ் கே.எல்.ராகுல் அடிக்கவில்லை. இதில் மூன்று 600+ ரன்களை அடித்திருக்கிறார். நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்து, செளத் ஆப்பிரிக்கா அணியோடு விளையாட இருக்கிற இருபது ஓவர் போட்டி தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

இன்று எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியோடு லக்னோ அணி மோத இருக்கும் நிலையில், இந்த ஆட்டம் குறித்துப் பாகிஸ்தானின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியதாவது, “விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த பொழுது கே.எல்.ராகுலை அதிகம் ஆதரித்தார். அவரை அவர்தான் துவக்க வீரராகவும் கொண்டுவந்து, இந்திய அணியின் நிரந்தர வீரராகவும் மாற்றினார். கே.எல்.ராகுல் நல்ல குணமுடைய மற்றும் விவேகமான இளைஞர். இந்திய அணிக்காகவும், ஐ.பி.எல் தொடரிலும் அவர் தன்னை தீவிர போட்டியாளராக வெற்றிக்கரமாக வெளிப்படுத்தி உள்ளார். கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் முக்கியக் காரணியாக இருப்பார் என்று நம்புகிறேன். அதாவது அவர் போட்டியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து, பார்வையாளர்களைத் தன்னைச் தொடர செய்வார் என்று நம்புகிறேன். இந்தப் போட்டியில் நான் கே.எல்.ராகுலோடு போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்!