“என் கண்ணுக்கு முன்னால் அது மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது” – பரபரப்பான நிமிடங்களை விவரித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்!

0
138

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி ஆட்டத்தின் கடைசி பந்து வரை யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்வியுடனே ஆட்டம் நகர்ந்தது.

1992 ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முதலாக உலகக் கோப்பை போட்டிகளில் சந்தித்தனர். அன்றிலிருந்து 2016 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை வரை எந்த ஒரு ஐசிசி போட்டிகளிலும் தோல்வியடையாமல் இருந்தது. முதன் முதலாக இந்திய அணி ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் அண்ணனிடம் தோல்வியை தழுவியது 2017 ஆம் ஆண்டில் தான். இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி சர்ப்ரோஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியிடம் ஐசிசி போட்டிகளில் முதல் முறையாக தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 338 ரன்களை எடுத்து இருந்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபக்கர் ஜமான் சிறப்பாக ஆடி தனது சதத்தினை பூர்த்தி செய்தார். 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இந்திய அணியின் தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் அரை சதம் எடுத்தார். பாகிஸ்தான் அணியின் பந்து வீக்கில் முகமது அமீர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் சதாப் கான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அன்றைய போட்டியில் அரை சதம் அடித்து பாகிஸ்தான் அணிக்கு ஒரு சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி போட்டியின் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார். இது பற்றி பேசி இருக்கும் அவர் ” இந்திய அணியை ரோகித் சர்மா விக்கெட்டை இழந்த பிறகு விராட் கோலி ஆட வந்தார். அப்போது விராட் கோலி கொடுத்த ஒரு கேட்சிக்கான வாய்ப்பு நான் தவற விட்டு விட்டேன் . அந்த நிமிடம் என் வாழ்வில் ஒரு மோசமான நேரம் . அந்த நொடியில் இருந்து விராட் கோலி ஆட்டம் இழக்கும் வரை என் மனதிற்குள் பலவாறான எண்ணங்கள் உலாவிக் கொண்டிருந்தன என தெரிவித்திருக்கிறார் .

மேலும் அந்த நிகழ்வு பற்றி தொடர்ந்து பேசிய அசார் அலி ” இறைவனின் அருளால் அன்று ஒரு நாள் விராட் கோலி ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்து விட்டார். அவர் வழக்கம் போல் தன்னுடைய சிறப்பாக வாடி அந்தப் போட்டியை இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தானில் என்னுடைய வீட்டை தரைமட்டமாக்கி இருப்பார்கள். இந்த ஒரு காட்சி மட்டும் தான் எனது மனதிற்குள்ளும் கண்ணுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன . என்னுடைய அதிர்ஷ்டம் அடுத்த இரண்டு பந்துகளிலேயே ஐந்து ரண்களில் ஆட்டம் இழந்தார். என ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எழுதிப்போட்டியின் நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார் அசார் அலி

- Advertisement -