2011 உலக கோப்பையை ஜெயித்தது கம்பீர்தான்.. கோலியோ தோனியோ கிடையாது.. சவுரவ் கங்குலி அதிரடியான பேட்டி!

0
1600
Ganguly

சற்று முன்பு ஆசியக் கோப்பை க்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. காயத்தில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயா ஐயர் இருவரும் திரும்பி இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இருக்கிறார்கள். ஏனென்றால் இந்திய அணிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் யாரை வைத்து விளையாடுவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக போய்க் கொண்டிருக்கிறது.

- Advertisement -

கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையிலும் இதே மாதிரியான பிரச்சனைகள் தொடர்ந்து, இறுதி நேரத்தில் அம்பதி ராய்டுக்கு பதிலாக விஜய் சங்கரை கூட்டிக்கொண்டு போனது பெரிய சர்ச்சையாக மாறியது.

தற்பொழுது இது குறித்து மும்பையில் இருந்து சற்று முன் பேசியிருக்கும் சவுரவ் கங்குலி ” இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காம் இடத்தில் விளையாடுவதற்கு பிரச்சனை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அந்த இடம் வலிமையாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். நான் விளையாடும் காலத்தில் துவக்க வீரராகவோ அல்லது நடுவரிசை வீரராகவோ திடீரென்று யாராவது உருவாவார்கள்.

நான் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் மிடில் வரிசையில்தான் ஆரம்பித்தேன். பின்பு சச்சின் கேப்டனாக இருந்த பொழுது என்னை துவக்க வீரராக விளையாடும்படி கேட்டுக்கொண்டார். இதே போல்தான் சச்சினுக்கும் நடந்தது.

- Advertisement -

எனவே நம்பர் நான்காம் இடத்தில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம். விராட் கோலி விளையாடலாம், கே எல் ராகுல் விளையாடலாம், ஸ்ரேயாஸ் விளையாடலாம், இப்படி அந்த இடத்தில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு மிக அபாரமான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.

யுவராஜ் சிங்குக்குப் பிறகு அந்த இடத்தில் விளையாட ஆள் இல்லை என்பதாக நான் படித்தேன். நான் கேப்டனாக இருந்த பொழுது அவர் நம்பர் ஆறாம் இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார். தோனி கேப்டனாக ஆனதற்கு பிறகு அவர் நான்காம் இடத்திற்கு சென்று நன்றாக விளையாடினார். ஆனால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஐந்தாம் இடத்தில் தோனி வந்து விளையாடினார்.

அதனால் இது எதுவுமே கடினம் கிடையாது. உங்களுக்கு தேவை அந்த இடத்தில் விளையாடுவதற்கு யாராவது ஒருவர். அதை முடிவு செய்து அப்படியே விளையாட விடுங்கள். ஏனென்றால் நீங்கள் நம்பர் நான்கை மட்டும் வைத்துக்கொண்டு உலக கோப்பையை வெல்ல முடியாது. இந்தியா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கம்பீர்தான் வென்றார். அவர் 97 ரன்கள் அடித்தார். அவர் நான்காம் இடத்தில் விளையாடவில்லை!” என்று கூறி இருக்கிறார்!