ஷமி விஷயத்தில் அதிரடி திருப்பம்.. ஆஸிக்கு பெரிய பின்னடைவு.. ரோகித் கம்பீர் நிம்மதி பெருமூச்சு.. வெளியான தகவல்கள்

0
1318
Shami

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் தரப்பில் இருந்து அதிரடியான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அணியில் இணைய முடியாமல் போனது.

- Advertisement -

நடப்பு ரஞ்சி சீசனில் திருப்பம்

இந்த நிலையில் முகமது ஷமி காயம் குணமடைந்து உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ரஞ்சித் டிராபியில் பெங்கால் மாநில அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அவர் விளையாட முடியாமல் போக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற முடியவில்லை.

தற்பொழுது இந்த விஷயத்தில் ஒரு மிக முக்கிய திருப்பமாக நாளை ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி களம் இறங்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை பெங்கால் பயிற்சியாளர் ரத்தன் சுக்லா உறுதி செய்து இருக்கிறார். மேலும் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து முகமது ஷமி உடல் தகுதிக்கான சான்றிதழையும் பெற்றுவிட்டார். எனவே அவர் களமிறங்குவது உறுதியாகிவிட்டது.

- Advertisement -

இந்திய அணியில் இணைவதற்கான வாய்ப்பு

மத்திய பிரதேஷ் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் முகமது ஷமி எதிர்பார்க்கும் அளவுக்கு சராசரியாக செயல்பட்டு விட்டால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியா செல்வதற்கு விமானத்தில் ஏறுவார் என செய்திகள் தெரிவிக்கிறது. முகமது சிராஜ் பவுலிங் ஃபார்ம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் ஷமியின் வரவு இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையாக மாற இருக்கிறது.

இதையும் படிங்க : என் மதிப்பு ரொம்ப பெருசு.. அதனால சிஎஸ்கே ஏலத்துல எடுக்கும்.. இல்லனா இவங்க எடுக்கணும் – தீபக் சாஹர் பேட்டி

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஷமி இல்லாதது கவசத்தை இந்திய அணி இழந்தது போல எனவும், அவருக்கு எதிராக விளையாடிய வீரர்கள் அவர் குறித்து சொல்வதை அவரது திறமைக்கு சாட்சி எனவும் பேசியிருந்தார். இந்த நிலையில் முகமது சாமி ரஞ்சி டிராபியில் பங்கேற்க இருப்பது, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீருக்கு நிம்மதி பெரு மூச்சை வரவழைத்து இருக்கிறது!

- Advertisement -