ரசிகர்களுக்கான விருந்தினர் பெட்டியில் இருந்து ஐபிஎல் 2022 போட்டியை பார்த்த இஷாந்த் சர்மா; கவலையில் ரசிகர்கள்

0
108
Ishant Sharma Virtual Guest

நேற்று ஐ.பி.எல்-ன் ஆறாவது போட்டியில், நவி மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், கொல்கத்தா பெங்களூரு அணிகளுக்கிடையே, ஒரு குறைந்த ஸ்கோர் மேட்ச் பரபரப்பாக, பல திருப்பங்களோடு நடந்தது. இதில் பெங்களூர் அணி இறுதி ஓவரில் பெற்றி வெற்றது.

ஆனால் நேற்றைய பரபரப்பான திருப்பங்களோடு அமைந்த போட்டியை விட, ஆச்சரியமான ஒரு விசயம் போட்டிக்கு நடுவில் நடந்துள்ளது. இதுக்குறித்து பல இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் ட்விட்டரில் ஆச்சரியத்தோடு அனுதாபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

ஐ.பி.எல் போட்டியில் விர்ச்சுவல் கெஸ்ட் பாக்ஸ் என்ற ஒரு விளம்பர நடைமுறை உள்ளது. அதில் நாம் வீட்டிலிருந்தபடியே ஒரு ஸ்பான்சரின் பிரதிநிதியாக, போட்டிக்கு நடுவே தொலைக்காட்சியில் தோன்றலாம். இதில் இதுவரை சாதாரண கிரிக்கெட் இரசிகர்களே இடம் பெற்று வந்துள்ள நிலையில்,ஓய்வுபெறாத பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர், இரசிகர்களோடு இரசிகராய் ரூபே எனும் ஸ்பான்சருக்காக தொலைக்காட்சியில் தோன்றினார். இதுதான் இப்போது ட்விட்டரில் ஆச்சரியமாகவும் அனுதாபத்தோடும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த ஓய்வு பெறாத பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யாரென்றால், இந்தியாவிற்காக நூறு டெஸ்ட் போட்டிகள் விளையாடிய சிறப்புகொண்ட வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாதான் அவர். நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில்

எந்த அணிகளும் அவரை வாங்காதிருந்த நிலையில், இப்போது விர்சுவல் கெஸ்ட் பாக்ஸில், இரசிகர்களோ இரசிகராய் அவர் தோன்றியிருப்பது ட்விட்டரில் பரவலாய் பகிரப்பட்டு வருகிறது. அங்கு ஒரு இந்திய கிரிக்கெட் இரசிகர் “மன்னித்துக்கொள்ளுங்கள் நீங்கள் சிறப்புக்குரியவர்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

- Advertisement -