இது தான் கடைசி வாய்ப்பு என சொன்ன டிராவிட்.. இஷான் கிஷன் சொன்ன பதில்.. முழு விவரம்

0
389

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி நட்சத்திர வீரர் இஷான் கிஷன் கடந்த சில காலமாக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பிறகு இஷான் கிஷன், 6 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். அதில் அவர் அதிகபட்சமாக அடித்தது வெறும் 37 ரன்கள் தான். இலங்கைக்கு எதிரான டி20 யில் 37 ,2, 1 என அடித்த இசாம் கிஷன்  நியூசிலாந்துக்கு எதிரான விளையாடிய 3 ஒரு நாள் போட்டியில் 5,8, 17 ரன்களை தான் அடித்திருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கண்டிப்பாக ரன் அடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அணியை  விட்டு நீக்கப்படுவார் என்று ராகுல் டிராவிட்  இசான் கிஷனுக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.இதனால் கடும் ஏமாற்றத்தில் இருக்கும் இசான் கிஷன், நியூஸிலாந்து தொடருக்காக தீவிர பயிற்சியில் இறங்கி இருக்கிறார். ராகுல் டிராவிட் எச்சரிக்கைக்கு மறைமுகமாக பதில் கொடுக்கும் விதத்தில் பிசிசிஐ நேர்காணலில் இசான் கிஷன் பேசி இருக்கும் வார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில்,  எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர் எங்கிருந்து வந்தாரோ நானும் அதே இடத்தில்தான் வந்திருக்கிறேன்.
நானும் ஜார்க்கண்ட் அனிக்காகத்தான் விளையாடுகிறேன். எனவே தோனி விட்டு சென்ற இடத்தை நான் நிரப்ப நினைக்கிறேன். தற்போது நான் ஜார்கண்டில் இருக்கிறேன். என்னுடைய அணி வெற்றி பெற நான் கடுமையாக முயற்சி செய்வேன் என்று பதில் அளித்து இருக்கிறார் .

ஏற்கனவே அணியில் வாய்ப்புக்காக பிரித்விஷா காத்திருக்கும் நிலையில் இஷான் தன்னுடைய திறமையை நிரூபித்து ஆக வேண்டும் இல்லை. இல்லை என்றால் அவருக்கான வாய்ப்பு ப்ரீத்வி ஷா போல பறிபோகலாம். தற்போது இஷான் கிஷனுக்கு உள்ள ஒரே ஆறுதலான விஷயம், தொடக்க வீரர் பந்தயத்திலிருந்து ருத்துராஜ் கெய்க்வாட் மீண்டும் காயம் காரணமாக தொடரை விட்டு விலகி இருக்கிறார். இதனால் இந்த மூன்று டி20 போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இசான் கிஷன் இருக்கிறார்.

- Advertisement -