பென் ஸ்டோக்ஸ் எடுத்ததில் தோனியின் பிளான் இருக்கா? – சிஎஸ்கே அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டியில் சொன்னது!

0
2449

பென் ஸ்டோக்ஸ் எடுத்ததில் தோனியின் திட்டம் ஏதேனும் இருக்கிறதா? என்பதற்கு பதில் கொடுத்துள்ளார் காசி விஸ்வநாதன்.

ஐபிஎல் மினி ஏலம் கொச்சியில் நடந்தது. இது மற்ற அணிகளுக்கு எப்படி இருந்ததோ, ஆனால் சென்னை அணிக்கு பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்டவுடன் சிறப்பாகவே அமைந்தது என்று கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் வெளிநாட்டு ஆல்ரவுண்டரை தேடியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் களமிறங்கியது. இவர்களின் குறி சாம் கர்ரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரின் மேல் இருந்தது.

முதலில் சாம் கர்ரனை எடுக்கும் முயற்சித்தனர். 15 கோடி வரை கேட்டனர். கிடைக்கவில்லை என்பதால் உடனடியாக பென் ஸ்டோக்ஸ் பக்கம் திரும்பி விட்டனர். 16.25 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார். மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டன் அனுபவம் நிறைந்தவர் என்பதால் சென்னை அணிக்கு மிகச் சரியான வீரராகவும் இவர் இருப்பார் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் எதிர்கால கேப்டனாக இவரை கொண்டு வருவதற்கு தோனி போட்ட திட்டமா இது? தோனி சொன்னதால்தான் பென்ஸ் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்டாரா? என்ற பல கேள்விகள் காசி விஸ்வநாதன் முன்பு வைக்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு காசி விஸ்வநாதன் சொன்ன பதில், “நாங்கள் வெளிநாட்டு ஆல்ரவுண்டர் வேண்டும் என்று தான் களம் இறங்கினோம். தோனியின் திட்டமும் அதுதான். முதலில் சாம் கர்ரன் தேவை என்று நினைத்தோம். இளம் வீரராக இருக்கிறார் இன்னும் பல ஆண்டுகள் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அவருக்கு ஏலம் கேட்டோம். 15 கோடிக்கு மேல் கொடுப்பது அதிகம் என தெரிந்தது. ஆகையால் நாங்கள் நின்று விட்டோம்.

பென் ஸ்டோக்ஸ் மிகுந்த அனுபவம் மற்றும் கேப்டன் ஆகவும் இருக்கிறார். அவரை கட்டாயம் எடுத்தாக வேண்டும் என்ற நோக்கில் தான் அவ்வளவு தூரம் கேட்டோம். இறுதியில் 16.25 கோடி ரூபாய் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தோனி தனிப்பட்ட ஒரு வீரர் பற்றி பேசவில்லை. ஆல்ரவுண்டர் வேண்டும் என்று மட்டுமே கூறினார். பென் ஸ்டோக்ஸ் கிடைத்ததில் அவரும் மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன்.” என்றார்.