இந்திய கிரிக்கெட்

நான் நினைச்ச அந்த ஒன்னு இனி நடக்காது.. இந்திய கிரிக்கெட்ல வீரர்களுக்கான வாய்ப்பு இனி இப்படித்தான் – கம்பீர் பேச்சு

​மூன்று ஃபார்மட் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை குறையும் என இந்திய அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

​தற்போதுள்ள தொடர்ச்சியான மேட்ச் அட்டவணை மற்றும் வேலைப்பளு காரணமாக வீரர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் முறை மிகவும் அவசியமாகி உள்ளது. இதனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் ஒவ்வொரு ஃபார்மட் போட்டிக்கும் தனித்தனி பிளேயர்கள் அடங்கிய ஸ்குவாட் அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

​குறிப்பாக, டி20ஐ போட்டிகள் அதிகரித்து வருவதால் ஒரே வீரர் டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20ஐ ஆகிய மூன்றிலும் தொடர்ந்து முதன்மை வீரராக நீடிப்பது சிரமமாக மாறுகிறது. இதனால் எதிர்காலத்தில் ஒரே வீரர் மூன்று ஃபார்மட் தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்துவது அரிதாகிவிடும் என தேர்வுக்குழுவின் நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

​இதுகுறித்து இந்திய அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர் பேசும்போது, “பயிற்சியாளர்களும் தேர்வாளர்களும் முடிந்தவரை அதிகமான வீரர்கள் டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20ஐ ஆகிய மூன்று ஃபார்மட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், வரும் காலங்களில் மூன்று ஃபார்மட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள்.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அவர் பேசும்போது, “ஏனெனில் வீரர்களுக்கான ரொட்டேஷன் முறை மற்றும் ஒவ்வொரு ஃபார்மட் போட்டிக்கும் ஏற்ப தனித்தனியாக செய்யப்படும் தயாரிப்புகள் ஆகியவை அணிகளை வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வைக்கும்.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by