ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராகும் ராபின் உத்தப்பா? சிஎஸ்கே அணியிலா?உத்தப்பா வெளியிட்ட முக்கிய தகவல்!

0
657
Uthappa

கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இருந்து தன்னை சுருக்கி கொண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் வேகம் எடுத்து வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அதே சமயத்தில் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் இருந்து டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு மாறி, மிகப்பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல், கிரிக்கெட் செல்லாத நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு சென்று இருக்கிறது.

அதே சமயத்தில் கிரிக்கட் டி20 வடிவத்தில் இருந்தும் இன்னும் சுருங்கி டி10 வடிவத்திற்கு வந்திருக்கிறது. இதற்கும் தற்பொழுது நிறைய ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாப்வே நாட்டில் ஜிம்பாவே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை வைத்து டி10 தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் ஜிம்பாப்வே நாட்டின் அணியான ஹராரே ஹரிகேன்ஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் முன்னாள் வீரருமான ராபின் உத்தப்பா விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரில் இருந்து பேசி உள்ள ராபின் உத்தப்பா ” கிரிக்கெட் சார்ந்த நான் பயிற்சியாளர் பொறுப்பில் ஈடுபட விரும்புகிறேன். நிச்சயமாக இதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து வாய்ப்புகள் வந்தால் நான் அதை பரிசீலிப்பேன். அதேபோல கிரிக்கெட் சார்ந்த ஏதாவது அணிக்கு இயக்குனராக கூட நான் வரலாம்.

நான் வெவ்வேறு டி20 அணிகளுடன் இருந்த காரணத்தினால் நல்ல டி20 அணிகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிக நன்றாக அறிவேன். அப்படியான நல்ல டி20 அணிகளை கட்டமைப்பதில் என்னால் திறமையாக செயல்பட முடியும். எனவே ஐபிஎல் தொடரிலிருந்து அப்படியான வாய்ப்பு வந்தால் நான் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்.

- Advertisement -

என்னைப் பொறுத்தவரை நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். நான் ஐபிஎல் தொடர் விளையாடுவதற்காக மட்டும் பத்து மாதங்கள் வருடத்தில் காத்திருந்தேன். நான் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை. ஏனென்றால் அது வளரும் ஒரு இளைஞருக்கான இடம். அதை நான் அபகரிக்க விரும்பவில்லை. சிவப்பு பந்து பயிற்சி ஐபிஎல் மாதிரியான வெள்ளை பந்து தொடருக்கு தேவைப்படாது.

கிரிக்கெட் உள்ளே நுழையாத பல நாடுகளுக்கும் கிரிக்கெட்டை எடுத்துச் செல்ல டி10 கிரிக்கெட் நல்ல வடிவம். இந்த விளையாட்டை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்று, அவர்களுக்கு அறிமுகப்படுத்தி இருப்பதும் வகையில் இந்த தொடர் நல்ல ஒரு முயற்சி. இதன் மூலம் நம்மால் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கிலும் கொண்டு வர முடியும்!” என்று கூறியிருக்கிறார்!