1992 ஆம் ஆண்டு போல உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லப் போகிறதா? ட்விட்டர் இணைப்பு!

0
15405
Pakistan

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது அரையிறுதி சுற்றை பாதி எட்டிவிட்டது. குழு 1ல் அரையிறுதிக்கான இரண்டு அணிகளாக நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் தகுதி பெற்று இருக்கின்றன!

குழு 2ல் அரையிறுதி இரண்டு அணிகளுக்கான இடங்களுக்கான போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் போட்டியில் இருக்கின்றன!

- Advertisement -

நாளை இந்த மூன்று அணிகளும் தங்களின் கடைசி போட்டியில் விளையாட இருக்கின்றன. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியும், மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் எதிர்கொள்கின்றன!

இந்தப் போட்டியில் மூன்று அணிகளும் வெல்லும் பட்சத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறும். தென் ஆப்பிரிக்க அணி தோற்றால் அல்லது போட்டி மழையால் கைவிடப்பட்டு மற்ற இரண்டு அணிகள் வென்றால் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் தகுதி வரும். தென் ஆப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் வென்று இந்திய அணி தோற்றால் இந்திய அணி வெளியேறும். மற்ற இரண்டு அணிகள் தகுதி பெறும்.

இந்த நிலையில் 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை தொடரை உதாரணமாக வைத்து, அந்தத் தொடரில் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றது போல வெல்லும் என ஒற்றுமைகளை கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

- Advertisement -

அதற்கு முந்தைய ஆண்டு 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆசியாவில் நடைபெற்றது அதில் ஆஸ்திரேலியா அணி சாம்பியனாக இருந்தது. அதற்கடுத்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா நடத்தியது ஆனால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. தற்போது ஆஸ்திரேலியா விஷயத்தில் இந்த இரண்டு விஷயங்களும் நடந்துள்ளது.

அதேபோல் அந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் முன்னேறி இருந்தன, அந்த உலகக் கோப்பை தொடரில் அறையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.

தற்போதும் பாகிஸ்தான் அணி தனது குழுவில் இரண்டாம் இடம் பிடிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி இரண்டாம் இடம் பிடித்தால், நியூசிலாந்து இடம்பெற்றுள்ள குழுவில் அந்த அணி முதலிடம் பெற்று இருப்பதால் நியூசிலாந்து அணி உடன் மோத வேண்டியது வரும். இந்த விஷயத்திலும் ஒற்றுமை இருக்கிறது. இதைக் காட்டி மீண்டும் 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை திரும்ப போகிறது என்று பேசி வருகிறார்கள். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.