கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டி20 கேரியர் முடிந்ததா? 2024 டி20 உலக கோப்பை?.. பிசிசிஐ’யின் அதிரடி முடிவு

0
1325

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய தூண்களாக விளங்கி வருபவர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி .

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களாக இவர்கள் வழங்கி வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை போலவே டி20 கிரிக்கெட் போட்டியிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய அணிக்காக ஏராளமான ரன்களை குவித்திருக்கின்றனர் . டி20 கிரிக்கெட் வடிவத்தில் அதிக சதங்களை எடுத்த வீரர்களின் ரோகித் சர்மா நான்கு சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் . 148 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கும் ரோஹித் சர்மா 3853 ரண்களை எடுத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கியமான வீரர் என்றால் அது விராட் கோலி தான். அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் நம்பர் ஒன் வீரராக விளங்கிய இவர் 50 க்கு மேல் சராசரி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . கடந்த இரண்டு வருடங்களாக அவுட் ஆப் ஃபார்மில் இருந்த விராட் கோலி கடந்த ஆசிய கோப்பை போட்டியில் இருந்து மீண்டும் ஃபார்மிற்கு திரும்பினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சதம் எடுத்ததிலிருந்து டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தார் . ஆனாலும் 2022 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு தொடர்ந்து ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது .

பிசிசிஐ புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த செய்திகளின்படி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் புதிய தேர்வு குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று வதந்திகள் பரவி வருகிறது. மேலும் புதிய தலைவர் வந்தவுடன் இந்தியாவின் மூத்த வீரர்களிடம் அவர்களது டி20 கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றி பேச இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

மேலும் பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் இன்சைட் ஸ்போர்ட்ஸ் என்ற செய்த இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் “2023 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற t20 உலக கோப்பையின் மீது முழு கவனமும் செலுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்திய அணி 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு கடந்த 16 ஆண்டுகளாக t20 உலக கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகெங்கிலும் பிரபலமாக இருக்கும் வேளையில் டி20 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றாதது ஒரு தோல்வியாகவே பார்க்கப்படுவதாக” தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஐம்பது ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு பிசிசிஐ மற்றும் இந்தியாவின் தேர்வு குழு டி20 உலக கோப்பைக்காண திட்டங்களை வகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார் . இதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் மூத்த வீரர்களுடன் அவர்களது டி20 எதிர்காலம் பற்றி தேர்வு குழுவினர் பேசி இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார் . ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விதிவிலக்கு என்றாலும் எல்லா விஷயங்களுக்குமே ஒரு முடிவு என்பது இருக்கும். அவர்கள் விரும்பிய வரை t20 போட்டிகளில் விளையாடலாம் என்றாலும் அவர்களிடமும் இது தொடர்பாக கலந்துரையாடப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.