அப்ப இந்த முறை நாம தானா?! முகமது கைஃபின் அட்டகாசமான உலக கோப்பை இந்திய பிளேயிங் லெவன்!

0
436
Kaif

இந்த ஆண்டு இந்தியாவில் வைத்து அக்டோபர் நவம்பர் மாதங்களில் முழுமையாக உலகக்கோப்பை தொடர் முதல்முறையாக நடைபெற இருக்கிறது!

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணி உடன் ஒருமுறை மோதும். இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். முடிவில் இறுதிப்போட்டி நடைபெற்று சாம்பியன் அணி தேர்வாகும்!

- Advertisement -

தற்பொழுது நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காகப் பங்கேற்க தகுதி அடைந்துள்ள 10 அணிகளும் மிகத் தீவிரமான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இந்திய அணியும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் வலிமையான ஒரு பிளையிங் லெவனை உலகக்கோப்பைக்காக இந்திய அணிக்கு தயாரித்து இருக்கிறார். அந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுலும் நீடிக்கிறார்கள்.

அவருடைய அணியில் பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் இல்லை சர்துல் தாக்கூர் ஆகியோர் இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவும், வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சமி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா இருவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

முகமது கைப்பின் உலகக்கோப்பைக்கான இந்திய பிளேயிங் லெவன் ;

ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்/ ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

தனது பிளேயிங் லெவன் பற்றி பேசி உள்ள முகமது கைப், இந்த அணியில் மேற்கொண்டு வீரர்கள் யாராவது இருப்பார்களா என்றால் இஷான் கிஷான் சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவ் மூவரும் இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.