இனி கலர் ஜெர்சிக்கு ஹர்திக் பாண்டியாதான் கேப்டனா? – ரோகித் சர்மா பளீச் பதில்!

0
1594
Rohitsharma

இந்தியா வந்துள்ள இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியிடம் இழந்துவிட்டு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உடன் மோத இருக்கிறது!

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நாளை துவங்க இருக்கிறது. முதல் போட்டி நாளை துவங்க உள்ளதால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி வருகிறார்!

- Advertisement -

இதற்கு முன்பு நடைபெற்ற டி20 தொடரில் மூத்த அனுபவ வீரர்களான கே எல் ராகுல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மூவரும் இடம் பெறவில்லை. இதனால் இனி தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவே டி20 அணிக்கு கேப்டனாக தொடர்வார், இளம் வீரர்கள் மட்டுமே டி20 அணியில் இடம் பெறுவார்கள் என்ற பேச்சு உருவாகி இருக்கிறது.

இதையெல்லாம் சேர்த்து பத்திரிகையாளர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்விகளை முன்வைக்க அதற்கு ரோகித் சர்மா மிகவும் வெளிப்படையாகவே தனது பதில்களை கூறி இருக்கிறார்!

இலங்கை அணி ஊடலான டி20 தொடரில் இடம் பெறாதது மற்றும் அவரது டி20 எதிர்காலம் பற்றிய கேள்விக்கு ” இது எங்களுக்கு உலகக் கோப்பை ஆண்டு. சில வீரர்களுக்கு எல்லா வடிவங்களிலும் ஆடுவது சாத்தியமில்லை. அட்டவணையை பார்த்தால் இது புரியும் இதனால் வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிக்கும் பொறுப்பு இருப்பதால் நாங்கள் இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டோம். இதற்குள் நானும் வருவேன். எனவே வீரர்களுக்கு இலங்கை உடனான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது ” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசி உள்ள அவர்
” எங்களிடம் ஆறு டி20 போட்டிகள் மட்டுமே இருந்தது அதில் தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்து விட்டது. நியூசிலாந்து அணி உடன் மட்டும் இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை அப்பொழுது பார்ப்போம். அதேபோல் நான் டி20 கிரிக்கெட்டை விட்டு விலகுவதாக எனக்கு எண்ணம் கிடையாது ” என்று தெரிவித்துள்ளார்!

ஹர்திக் பாண்டியாவின் நிரந்தர கேப்டன்சி பற்றிய கேள்விக்கு ” இப்போது சொல்வது கடினம் தற்போது அனைவரது கவனமும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பை மீதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மீதும்தான் இருக்கிறது. எதிர்கால கேப்டன் யார் என்பதை எதிர்காலம் சொல்லும் அதற்கு நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக கூறி முடித்திருக்கிறார்!