“இந்த தார் ரோட்ல விளையாடிதான் பாபர் அசாம்”-முன்னாள் நியூஸிலாந்து வீரர் காட்டம்!

0
675

நியூசிலாந்து அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆட இருக்கிறது இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது . இதனை அடுத்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நடைபெற்று வருகிறது .

நான்காம் நாளான இன்று நியூசிலாந்து அணி 151 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.பிளெண்டில் 22 ரன்கள்டனும் பிரேஸ்வெல் 10 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் .தற்போது வரை நியூசிலாந்து அணி 192 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ..

சமீபகாலமாகவே பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஆடுகளங்கள் தொடர்பான சர்ச்சை வெகுவாக பேசப்பட்டு வருகிறது . பெரும்பாலும் அவர்களது நாட்டில் அமைக்கப்படும் பிட்ச்கள் தார் ரோடு போல பந்துவீச்சுக்கு எந்தவித உதவியும் அளிக்காமல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கிறது . இதனால் தற்போது டெஸ்ட் போட்டிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் பாதிக்கப்படும் என்று முன்னால் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கவலை தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக தற்போது பேசியுள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டௌல் பாகிஸ்தான் அணியின் ஆடுகளங்களில் தரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் . “பந்து வீசியாளர்களுக்கு ஒரு சிறு உதவி கூட இந்த ஆடுகளிலிருந்து கிடைக்கப் போவதில்லை . இப்படிப்பட்ட ஆடுகளங்களை ஏன் கிரிக்கெட் வாரியம் அமைக்கிறது என்று எனக்கு புரியவில்லை” என்று கூறி இருக்கிறார் .

மேலும் இது தொடர்பாக பேசி உள்ளவர் “இந்த மாதிரியான பிட்ச்கள் கேப்டன் பாபர் அசாம் அறிவுறுத்தலின்படி இப்படி அமைக்கப்படுகின்றனவா?என்று கேள்வி எழுப்பியுள்ளார் . தொடர்ந்து பேசுகையில் பாபர் அசாம் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இதுபோன்ற தார் ரோடுகளில் ஆடித்தான் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டுமா? அவரால் எந்த மாதிரியான சீம் மற்றும் ஸ்விங் ஆகக்கூடிய ஆடுகளிலும் ரண்களை குவிக்க முடியும் என்று நமக்கு தெரியும் . இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் சிறப்பாக ஆடி இருக்கிறார் . அப்படி இருந்தும் இது போன்ற ஆடுகளங்கள் ஏன் அமைக்கப்படுகின்றன” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களிலும் பாகிஸ்தான அணி கடும் தோல்வியை சந்தித்தது. இதற்கும் தரமற்ற ஆடுகளங்களை காரணம் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர் . தொடர்ந்து இது போன்ற ஆடுகளங்களை அமைப்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை அழிவுக்கு இழுத்துச் செல்லும் என்றும் எச்சரித்து இருந்தனர் .