கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இந்த 3 இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் நிச்சயம் ஒருவர் இடம்பெற வேண்டும் – இர்பான் பதான் உறுதி

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 2 தொடர்களில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து டி20 உலகக் கோப்பைக்கான சோதனையில் ஈடுபட்டுள்ளது. அவேஷ் கான், பிஷ்னாய் போன்ற வீரர்கள் புதிதாக களமிறங்கி மைதானத்தில் அசத்தினர். சென்ற ஆண்டு இலங்கைக்கு சென்ற இந்திய அணி, டி20 தொடரை இழந்து நாடு திரும்பியது. முதன்மை வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகின்றனர். ஆகையால் இளம் வீரர்கள் கொண்ட அணி களமிறங்கியது.

- Advertisement -

அப்போது இடதுகை பந்துவீச்சாளராக சேத்தன் சக்காரியா மட்டுமே அணியில் இருந்தார். பின்னர் எந்த ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரும் அணியில் இணையவில்லை. ஜாகீர் கான், இர்பான் பதான், நெஹ்ராவுக்குப் பின்னர் ஒரு நம்பிக்கையான இடதுகை பந்துவீச்சாளரை இந்திய அணி இன்னுமும் தேடி வருகிறது. ஐ.பி.எலில் ஜொலித்து இந்திய அணிக்கு திரும்பிய வீரர்கள் யாரும் பெரிதாக அணியில் நிலைக்கவில்லை.

அடுத்து ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. இம்முறை ரோஹித் & கோ கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கான அனைத்து பணிகளையும் அவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் ஓர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இருந்தே ஆக வேண்டும் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணல் ஒன்றில் இர்பான் பதான் கூறினார்.

“ அந்த ஒரு இடத்திற்கு 3 வீரர்கள் சரியான தேர்வாக இருப்பார்கள். அவர்கள் கலீல் அஹமத், நடராஜன் மற்றும் சேத்தன் சக்காரியா ஆவர். இந்திய அணியில் இவ்வளவு பெரிய பொறுப்பை சக்காரியாவுக்கு வழங்குவது கடினமான ஒன்று தான். அடுத்து நடைபெறவுள்ள ஐ.பி.எலில் சிறப்பாக செயல்பட்டால், அவரை அழைத்துச் செல்லலாம். ஏனென்றால் இடது எப்போதும் சரியானது ” என்று தன் கருத்தைப் பதிவு செய்தார் இர்பான் பதான்.

- Advertisement -
Published by